ஞாயிறு, நவம்பர் 27, 2011

அதிகாலை எழுந்தால் ஸ்லிம் ஆகலாம்!!!

லண்டன், : தூக்கத்தில் இருந்து அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் உடல் எடை குறைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள் என்று இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. லண்டன் ரோஹம்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் உடல் நிலை மற்றும் தூங்கும் பழக்கவழக்கங்கள் குறித்த ஆய்வில் இறங்கினர்.ஆய்வில் 1,068 பேர் கலந்து கொண்டனர்.
 

அதன் விவரம்: தூக்கத்தில் இருந்து சராசரியாக காலை 5.58 மணிக்கு எழுந்திருக்கும் நபர்களையும், காலை 8.54 மணி வரை தூங்கிய பிறகு எழுந்திருப்பவர்களின் நடவடிக்கை, உடல் நிலை பற்றி அறியப்பட்டது. அதில் காலையில் நேரம் கழித்து எழுந்திருக்கும் நபர்களைவிட, விடியற்காலை கண்விழித்து எழும் நபர்கள் உற்சாகமாக காணப்படுவது தெரிய வந்தது. அத்துடன் அவர்களது உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருந்தனர். தோல் சுருக்கமின்றி இளமையாக காணப்பட்டனர். உடல்வாகும் ஸ்லிம்மாக இருந்தனர். மேலும் வார இறுதியில் 2 பிரிவினருமே சற்று அதிக நேரம் தூங்குகின்றனர். அவ்வாறாக சீக்கிரம் எழுந்திருப்பவர்கள் காலை 7.45 மணி வரை தூங்குவதாக ஆய்வில் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக