வியாழன், நவம்பர் 24, 2011

சீனாவுடன் நேரடி மோதல் ஐ.நா குழு தேர்தலில் இந்தியா வெற்றி!!!

வாஷிங்டன் : ஐக்கிய நாடுகள் சபையில் கூட்டு ஆய்வு குழுவுக்கான(ஜே.ஐ.யு) தேர்தலில் சீனாவை இந்தியா தோற்கடித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் பல்வேறு அமைப்புகளில் சக்தி வாய்ந்த அமைப்பாக ஜே.ஐ.யு திகழ்கிறது. உறுப்பு நாடுகளின் நிதி விவகாரங்கள் தொடர்பான ஆய்வுக் குழு இது. 11 பேர்களை கொண்ட இந்த குழுவுக்கான தேர்தலில்,
ஆசிய பிராந்தியம் சார்பாக இந்தியாவும், சீனாவும் முதல் முறையாக நேரடியாக மோதின. இந்தியா சார்பில் கோபிநாதன், சீனா சார்பில் இந்தியாவுக்கான சீன தூதர் ஜாங்யன் போட்டியிட்டனர். 

உலகின் 2வது பெரிய பொருளாதார நாடான சீனாவுடன், இந்தியா நேரடியாக மோதியதால் இத்தேர்தல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. உச்சகட்ட பரபரப்புக்கு இடையே நடந்த தேர்தலில் 183 வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றது. சீனா 77 வாக்குகள் பெற்றது. 5 ஆண்டு பதவிக்காலம் உடைய இந்த பதவியை 2013 ஜனவரியில் கோபிநாத் ஏற்பார். தற்போது ஆசியா சார்பில் இதில் அங்கம் வகிக்கும் சீனாவின் பதவிக்காலம் 2012 டிசம்பர் 31ல் முடிகிறது.

கடந்த 35 ஆண்டுகளுக்குப்பின் இந்தியா இந்த குழுவுக்கு தேர்வாகியுள்ளது. முன்னதாக 1968&77ல் இதன் உறுப்பினராக இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் ஜே.ஐ.யுவில் இந்தியா இடம் பெறுவது குறிப்பிடத்தகுந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக