செவ்வாய், நவம்பர் 22, 2011

சாவர்க்கரும் அவரது கோயபல்ஸ் கூட்டமும்!

குஜராத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, நரேந்திர மோடி சொன்ன, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் எதிர்வினை காரணமல்ல என்பதையும், அது மோடியால் தயாரிக்கப்பட்ட இன அழித்தொழிப்பின் 'ஸ்கிரிப்ட்தான்என்பதையும் கடந்த காலங்களில் எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பட்டவர்த்தனாமாக அம்பலப்படுத்தினார்கள்.
அருண்ஷோரி, குருமூர்த்தி, சோ, நைபால் போன்றவர்கள், குஜராத்தில் நடந்தது ஒரு மதக்கலவரம் அதற்கும் முதல்வர் மோடிக்கும், அவருடைய அரசுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று ஒப்பாரி வைத்தனர். கோத்ரா ரயில் எரிப்பின் காரணமாகவே இது நடந்தது என்று  திரும்பத் திரும்ப எழுதியும், பேசியும் வந்தனர். இந்த கோயபல்ஸ்  சித்தாந்தவாதிகளின் முக்கய தலைவர்களில் ஒருவர்தான் சாவர்க்கரை போல். 



சாவர்க்கரின் வீரத்தை பற்றி வரலாறு என்ன சொல்கிறது பார்ப்போம்.  1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்பட்டு இருந்தார் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்த வந்த இந்த மன்னிப்பு படையெடுப்பால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரைமராத்திய மாநிலத்தில் உள்ள ரத்தினகிரிக்கு அனுப்புகிறது. 


1910களின் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன் அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகிறது.  தன்னை விடுதலை செய்ததற்கு நன்றி கடனாய் சாவர்க்கர் இந்து மகா சபை யில் தன்னை இணைத்து கொண்டு வெள்ளையர்களுக்கு சேவகம் செய்கிறார்மேலும் இவர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. அந்த இயக்கத்தை அவர் எதிர்த்து வந்தார் என்பதே அந்த வரலாற்று உண்மை.  அதன் பின்னர் 1925 தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.

இந்த அஞ்சா நெஞ்சர் சாவர்கரின் வழிவந்தவர்களே  RSS , VHP , BJP,  பஜ்ராங்க்தல், ஹிந்து முன்னணி, சிவசேனை, அகிலபாரதிய வித்யாதி பரிசத் போன்ற வானர கூட்டங்களும்,  தினமலர், தினமணி, இந்தியா டுடே, போன்ற அவற்றின் ஊது குழல்களும் ஆவர். இவர்களுக்கு ஒரு அஜண்டா வேறு, அதுதான்  இந்தியாவை ஹிந்து நாடக்க வேண்டும். அத்தோடு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீன, சவூதி அரேபிய வரை இவர்களது அகண்ட பாரத எல்லை போகிறது. இப்படி ஒரு கோயபல்ஸ் கொள்கையை சொல்லி ஹிந்துக்களை ஏமாற்றி ஆட்சிபீடத்தில் அமர்வதே இவர்களது நோக்கம் வேறொன்றும் இல்லை. இதில் ரெத்தம் சிந்த போவது அப்பாவிகளே கடைசியில் பிராமணர்கள் நாட்டை மீண்டும் ஆள்வார்கள். 

நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக