சென்னை : இறக்குமதி குறைவால் சர்க்கரை மற்றும் எண்ணெய் வகைகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. பாமாயில் கிலோவுக்கு ரூ.6 அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தற்போது சர்க்கரை மூட்டைக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த வாரம் 100 கிலோ சர்க்கரை மூட்டை ரூ.2,880 விற்றது
ரூ.3,080 ஆக உயர்ந்துள்ளது. மத்திய அரசு சர்க்கரை ஆலைகளுக்கு மாதம் 17 லட்சம் டன் சர்க்கரை வழங்கி வந்தது. இது தற்போது 16 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அடுத்த வாரம் இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல பாமாயில் (1 கிலோ) ரூ.58லிருந்து
ரூ. 64க்கும், சன்பிளவர் ஆயில் ரூ.70லிருந்து ரூ.75, தேங்காய் எண்ணெய்
ரூ. 120லிருந்து ரூ. 130க்கும், அக்மார்க் நல்லெண்ணெய் ஸீ 125லிருந்து
ரூ. 135க்கும், 2ம் ரகம்
ரூ. 80லிருந்து ரூ. 90 ஆகவும் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி குறைவாக உள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது பண்டிகை காலம் என்பதால் சர்க்கரை (சேலம்) கிலோ ரூ. 35லிருந்து ரூ. 40க்கும், சர்க்கரை (வேலூர்) ரூ. 40லிருந்து ரூ. 45 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதேபோல், விளைச் சல் அதிகம் காரணமாக துவரம் பருப்பு ரூ. 70லிருந்து ரூ. 60க்கும், தான்சானியா துவரம் பருப்பு ரூ. 60லிருந்து ரூ. 50க் கும், உளுந்தம் பருப்பு ரூ. 70லிருந்து ரூ.60க்கும், பர்மா உளுந்தம் பருப்பு ரூ. 60லிருந்து ரூ. 50க்கும், பாசிப்பருப்பு ரூ. 75லிருந்து ரூ. 65க்கும், 2ம் ரகம் ரூ. 60லிருந்து ரூ. 50க்கும், கடலை பருப்பு ரூ. 60 லிருந்து ரூ. 55க்கும், 2ம் ரகம் ரூ. 58லிருந்து ரூ. 52 ஆகவும் குறைந்துள்ளது. இந்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
குண்டு மிளகாய் கிலோ ரூ. 190லிருந்து ரூ. 160க்கும், நீட்டு மிளகாய் ரூ. 130லி ருந்து ரூ. 100க்கும், புளி ரூ. 160லிருந்து ரூ. 130க்கும், 2ம் ரகம் ரூ. 130லிருந்து ரூ. 110க்கும் குறைந்துள்ளது. புது புளி வரத்து வந்தால் விலை மேலும் குறையும். கொத்தமல்லி ரூ.75லிருந்து ரூ. 60 ஆக குறைந்துள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் தெரிவித்தார். சில்லரை கடைகளில் மொத்த மார்க்கெட்டை விட கிலோவுக்கு ரூ. 3 லிருந்து ரூ. 5 வரை அதிகமாக விற்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக