புதன், நவம்பர் 23, 2011

எந்தெந்த பாஸ் வைத்திருப்போர் எந்தெந்த பஸ்களில் போகலாம்

சென்னை : எந்தெந்த பாஸ் வைத்திருப்போர் எந்த பஸ்களில் பயணம் செய்யலாம் என்ற பட்டியலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது. பஸ்களில் கட்டண உயர்வு காரணமாக, மாதாந்திர பயணச்சீட்டுகளை பயன்படுத்துவதில் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகம்,
மாதாந்திர பயணச்சீட்டுகள்        வைத்திருப்போர் எந்தெந்த பஸ்களில் பயணம் செய்யலாம்.என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்படுகின்ற மாதாந்திர சலுகைக் கட்டண பயணச் சீட்டுகள், விருப்பம்போல் பயணம் செய்யும் பயணச்சீட்டுகள், இலவச மற்றும் 50 சதவீத மாணவர் சலுகை கட்டண பயணச்சீட்டுகள் வைத்துள்ளவர்கள் குறிப்பிட்ட சில பஸ்களில் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, மாதாந்திர சலுகை கட்டண பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் சாதாரண, விரைவு பஸ்களில் மட்டும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல், விருப்பம்போல் பயணம் செய்யும் பயணச்சீட்டுகளில், ஒரு நாள் பயணச்சீட்டு (ரூ.50) வைத்திருப்போர் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பஸ்களில் மட்டும் பயணம் செய்யலாம். வாராந்திர பயணச் சீட்டு (^300) மற்றும் மாதாந்திர பயணச்சீட்டு (ரூ.1000) ஆகிய பாஸ் வைத்திருப்போர், சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பஸ்கள் மற்றும் இரவு நேர பஸ்களில் பயன்படுத்தலாம். இலவச மாணவர் பயணச்சீட்டுகள், மாணவர்களுக்கான 50 சதவீத சலுகைக் கட்டண பயணச் சீட்டுகள் வைத்திருப்போர் சாதாரண, விரைவு மற்றும் சொகுசு பஸ்களில் மட்டும் பயணம் செய்யலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக