புதன், நவம்பர் 30, 2011

இருளர் பெண்கள் பலாத்காரம் தமிழக போலீசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்!!!

சென்னை : இருளர் பெண்கள் பலாத்கார வழக்கில் போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனே மருத்துவ சோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். வக்கீல் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனுவில், ÔÔதிருக்கோவிலூர் அருகே மண்டபம் ஊரில் இருளர் இனத்தை சேர்ந்த 4 இளம்பெண்களை
நள்ளிரவில் போலீசார் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட போலீசாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்ÕÕ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜராகி, ÔÔபெண்களை நள்ளிரவில் கைது செய்ய தடை உள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம்  பல முறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பின்னரும் போலீசார் ஒரு திருட்டு வழக்குக்காக 4 பெண்களை நள்ளிரவில் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். தைலமர காட்டில் பலாத்காரம் செய்துள்ளனர். வெளியே கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளனர். இந்த கொடூர செயலுக்கு நீதிமன்றம்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்ÕÕ என்றார்.

தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜராகி, ÔÔஇதுதொடர்பாக 4 போலீசாரரை சஸ்பெண்ட் செய்துள்ளோம். அவர்கள் திருக்கோவிலூரில் இருக்க கூடாது என உத்தரவிட்டுள்ளோம். 2 வாரத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம்ÕÕ என்றார். அப்போது, வக்கீல் ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, ÔÔபாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்னும் மருத்துவ பரிசோதனை செய்யவில்லைÕÕ என்றார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ÔÔபோலீசாரின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களை நள்ளிரவில் கைது செய்தது தவறு என அரசு வக்கீல் கூறியதை ஏற்றுக் கொள்கிறோம்ÕÕ என்றனர். 4 பெண்களையும் மருத்துவ சோதனைக்கு அனுப்பினீர்களா என கேள்வியும் எழுப்பினர். பப்ளிக் பிராசிக்யூட்டர் ஐ.சுப்பிரமணியம் ஆஜராகி, ÔÔஇதில் மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. அதன்பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவோம்ÕÕ என்றார்.

அதை கேட்ட நீதிபதிகள், ÔÔபாதிக்கப்பட்ட பெண் களை உடனே மருத்துவ சோதனைக்கு அனுப்பாமல் ஒரு மாதத்துக்கு பின்பு அனுப்புவீர்களாÕÕ என கேள்வி எழுப்பினர். உடனடியாக மருத்துவ சோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் எஸ்பிக்கு உத்தரவிடுகிறோம். 2 வாரத்தில் அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான புகார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, திருக்கோவிலூர் நீதித்துறை நடுவரால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. போலீசார் குற்றம் இழைத்ததாக இந்த விசாரணை முடிவில் தெரியவந்தால், அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கும், தலா ரூ.5 லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள் ளேன்.    
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4 பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை

திருக்கோவிலூர்: பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்படும் வைகேஸ்வரி, ராதிகா, லட்சுமி, ரசிகா ஆகிய 4 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த மாஜிஸ்திரேட் முரளிதர கண்ணன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து டிஎஸ்பி பன்னீர்செல்வம் மேற்பார்வையில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் பெண் போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 4 பேரையும் அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக