வெள்ளி, நவம்பர் 25, 2011

ஃபலஸ்தீனுக்கான வரிப்பணத்தை உடனை அளிக்க இஸ்ரேலுக்கு ஐ.நா உத்தரவு!!!


ஐ.நா:ஃபலஸ்தீனுக்கு சொந்தமான வரிப்பண வசூல் தொகையை உடனடியாக ஃபலஸ்தீன் ஆணையத்திற்கு அளிக்கவேண்டுமென இஸ்ரேலுக்கு ஐ.நா உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோத குடியிருப்புகளை ஃபலஸ்தீன் பகுதியில் கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் எனவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியதாக மூனின் செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடும் வேளையில் பான் கீ மூன் வலியுறுத்தியதாக அவரது செய்தித்தொடர்பாளரை மேற்கோள்காட்டி எ.எஃபி.பி கூறுகிறது.ஃபலஸ்தீனுக்கு முழுமையான உறுப்பினர் பதவியை வழங்கிய ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஃபலஸ்தீனுக்கு சேரவேண்டிய வரிப்பண வசூல் தொகையை இஸ்ரேல் முடக்கி வைத்துள்ளது.மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை மற்றும் ஜெருசலமில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டவும் இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.இந்நிலையில் பான் கீ மூன் நெதன்யாகுவுக்கு தொலைபேசி மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக