லாஸ் ஏஞ்சல்ஸ்:போராட்டத்தை கைவிட்டு வெளியேற மேயரும், போலீஸ் தலைவரும் பிறப்பித்த இறுதி எச்சரிக்கையை புறக்கணிப்போம் என வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். வெளியேறுவதற்கு நேற்று காலை வரை அதிகாரிகள் எதிர்ப்பாளர்களுக்கு கால வரையறையை நிர்ணயித்திருந்தனர்
. அதேவேளையில், மிகச்சிறிய தொகையினர் மட்டுமே தற்காலிக கூடாரங்களை சிற்றி ஹாலுக்கு அருகிலிருந்து மாற்றியுள்ளனர். இதற்கிடையே பாதுகாப்பு படையினர் பிரயோகிக்கும் ரப்பர் புல்லட், கண்ணீர் புகை, நல்லமிளகு பொடி ஸ்ப்ரே ஆகியவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது. வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ள அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து ஒட்டுமொத்தமாக கைதாவது என எதிர்ப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். இறுதி எச்சரிக்கையை மீறும் அனைவரையும் கைது செய்வோம் என போலீஸ் தலைவர் சார்லி பைக் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக