ஒரு புகழ்பெற்ற மைதானம்....!அதுவும் தேசத்தின் தலை நகரம்...!
பல்லாயிரக்கணக்கான மக்கள் சங்கமித்த இடம்....!
எங்கே போனது ஊடகம்?
ஒரு வேளை ஊமையாகிப்போனதோ?
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா : ஒரு சமூக நல இயக்கம், கடந்த 1989 ஆம் ஆண்டிலே தொடங்கப்பட்டு ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறது. இந்தியாவின் கடைக்கோடி மாநிலமான கேரளாவிலிருந்து தொடங்கப்பட்ட இந்த பேரியக்கம்
படிப்படியாக வளர்ச்சி அடைந்து இன்று இந்தியாவின் எட்டுத்திசைகளிலும் மக்கள் பேராதரவோடு சமூகப்பணிகளை ஆற்றி வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுக்கும் ஒவ்வொரு பணிகளும் மக்கள் நலனுக்காகவே செய்யப்படுகிறது. ஆகவே தான் தென் இந்தியாவைக்காட்டிலும் தற்போது வட இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒரு வேகமான அதுவும் படிப்படியான் வளர்ச்சி அடைந்து வரும் இயக்கத்தினால் தேசவிரோத சக்திகளுக்கும், வகுப்புவாத சக்திகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இந்திய சுதந்திரத்திற்காய் தங்களது சதவீதத்தைவிட அதிகமான மக்கள் போராடியதாக வரலாறு கூறியிருந்தும், சுதந்திரத்தை இழந்து, கண்ணியத்தை இழந்த இந்த முஸ்லிம் சமூகம் தீவிரவாதிகளாய் சித்திரக்கப்படும் போது, தீவிரவாதிகள் யார்? தேசியவாதி யார்? என்பதை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் சிந்தித்திராத, முயற்ச்சி செய்திராத ஒரு கண்ணியமான செயல் தான் சுதந்திர தின அணிவகுப்பு.
மதக்கலவரங்களாலும், மோதல்களாலும் அப்பாவி மக்களை கொன்று குவித்த சங்கப்பரிவார சக்திகள் இந்த அணிவகுப்பை கண்டு நடுங்கி மிரள, அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களோ ஆனந்தக் கண்ணீர் விட்டனர் அணிவகுப்பைக்கண்டு.
கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர் நீதி மன்றத்திலிருந்து வெளியான் தீர்ப்பிற்குப் பின் இனியும் பாபரி மஸ்ஜித்திற்காக போராட வேண்டுமா? என்று எண்ணிய முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் "நீதி தேடும் பாபரி மஸ்ஜித்" என்ற தலைப்பில் நாடு முழுவதும் நடத்திய பிரச்சாரங்கள், விழிப்புணர்வு நாடகங்கள் போன்றவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.
முஸ்லிம் சமூகத்தின் வலிமைக்காவும், வளர்ச்சிக்காவும் தொலை நோக்கு சிந்தனையோடும், சாத்தியக்கூறாக விழங்கக்கூடிய பல பணிகளை செய்து வரும் பாப்புலர் ஃப்ரண்டால் தூக்கம் தொலைந்து திறியும் உளவுத்துறை எப்படியாயினும் பாப்புலர் ஃப்ரண்ட் செய்யும் பணிகளை தடுத்திட வேண்டும் என்ற முனைப்பில் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு உளவுத்துறையினர் அதிகம் பயன்படுத்துவது ஊடகத்துறையைத்தான்.
பாப்புலர் ஃப்ரண்ட் பற்றிய தவறான செய்திகளை பரப்புவதில் மட்டுமே முனைப்புடன் செயல்படுகிறது இந்த ஊடகத்துறை. இதில் எந்த பத்திரிக்கையும், நாளிதழும் விதிவிலக்கல்ல... ஆனால் பாப்புலர் ஃப்ரண்ட் செய்யும் சமூக சேவைகளை இந்த பத்திரிக்கைகள் பிரசுரிப்பதே இல்லை. காரணம் மக்கள் மத்தியில் பாப்புலர் ஃப்ரண்ட் மீது நற்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது உளவுத்துறை.
தேசத்தின் தலைநகரமான புதுடெல்லியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்ட ஓர் இடம் அதுவும் புகழ்பெற்ற ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமான ஒரு மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட். ஆனால் இது பற்றிய செய்தி எந்த நாளிதழிலும் வெளிவரவில்லை (சிறு பத்திரிக்கைகளைத்தவிர). அப்படியானால்? ஊடகம் ஊமையாகிப்போனதோ?
ஊடகங்கள் இந்தச்செய்திகளை மக்கள் மன்றத்தில் எடுத்துச்செல்கிறதோ? இல்லையோ? பாப்புலர் ஃப்ரண்டின் வளர்ச்சி ஊடகங்களில் கைகளில் இல்லை. ஊடகங்கள் செய்யும் தவறான பிரச்சாரங்களை ஒரு ஏணியாக உபயோகப்படுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் தனது கால்களை ஆழமாக பதித்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மக்களால், மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம். இறையருளால் அது தன்னுடைய இலக்கை அடைந்தே தீரும்! இன்ஷா அல்லாஹ்!
ஆக்கம்: முத்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக