ஞாயிறு, நவம்பர் 27, 2011

உதவிகள் நிறுத்தினார் கிலானி நேட்டோ படை குண்டு மழை பாக். வீரர்கள் 28 பேர் பலி


இஸ்லாமாபாத்:வடமேற்கு பாகிஸ்தானில் பழங்குடியினர் வாழும் பகுதியில் ராணுவ செக்போஸ்டின் மீது நேட்டோ படை நடத்திய விமானத் தாக்குதலில் 28 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். மெஹ்மந்த் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸலாலா கிராமத்தில் உள்ள
செக்போஸ்ட் மீது தாக்குதல் நடந்துள்ளது.40 ராணுவ வீரர்கள் அப்பொழுது செக்போஸ்ட் அருகே இருந்துள்ளனர்.
இத்தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினருக்கு சரக்குகளை கொண்டு செல்லும் முக்கிய பாதையை பாகிஸ்தான் அடைத்துள்ளது. எண்ணெய் மற்றும் சரக்குகளுடன் ஆப்கானிஸ்தானிற்கு சென்று கொண்டிருந்த 40 ட்ரக்குகளை பாகிஸ்தான் அதிகாரிகள் கைபர் மாகாணத்தில் ஜம்ருத் செக்போஸ்டில் வைத்து திருப்பி அனுப்பியுள்ளனர். நேட்டோ படையினருக்கு தேவையான 49 சதவீத சரக்குகளும் பாகிஸ்தான் வழியாகத்தான் செல்கிறது.
ஆப்கானில் இருந்து நேட்டோ ராணுவம் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்த எவ்வித காரணமுமில்லை என மூத்த ராணுவ அதிகாரி கூறுகிறார். ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில்தான் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபான் போராளிகள் நுழையாமல் இருக்க பாகிஸ்தான் படை நிறுவியதுதான் இந்த செக்போஸ்ட். இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், அதனை குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் நேட்டோ வட்டாரங்கள் கூறுகின்றன. எல்லை
பாதுகாப்பை குறித்து அமெரிக்க நேட்டோ தலைவர் ஜெனரல் ஜான் ஆலனும், பாகிஸ்தான் படைத்தளபதி மேஜர் ஜெனரல் அஷ்பாக் கயானியும் பேச்சுவார்த்தை நடத்திய மறுதினம் இத்தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அமெரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் இரண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதை தொடர்ந்து நேட்டோ ராணுவத்தினரின் சரக்குகளை பாகிஸ்தானிலிருந்து கொண்டு செல்வதற்கு 10 தினங்கள் அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது.
இத்தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க தூதரை அழைத்து பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக