வியாழன், நவம்பர் 24, 2011

100வது நாளைத் தொட்டது கூடங்குளம் போராட்டம்!!!

கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி மக்களின் போராட்டம் இன்று 100வது நாளைத் தொட்டது. பாதுகாக்கப்பட்ட கூடங்குளம் அணு மின்சக்தி நாட்டின் வளர்ச் சிக்கு மிகவும் தேவை; அதே நேரத்தில் அப்பகுதி வாழ் மக்களின் அச்சத்தை போக்க, மக்கள் மத்தியில் பீதி பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மேலும் அப்பகுதி மக்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி மூன்று கட்டமாக இதுவரை போராட்டம் நடத்தியுள்ளனர்.

முதலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்ட போராட்டக் குழு, இரண்டாவது கட்டமாக கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு செல்பவர்களை தடுத்து முற்றுகை போராட்டம் நடத்தியது. 3வது கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, இடிந்தகரையில் தொடர் போராட்டத்தை தொடங்கினர். மேலும் போராட்டக் குழுக்கு ஆதரவாக, தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை, நெல்லை மாவட்டம் இடிந்தகரை, கூத்தங்குளி, கூடுதாழை, உவரி, கூட்டப்பனை, கூத்தப்புளி, பெருமணல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவர்கள் கறுப்பு கொடி கட்டிய படகுகளுடன் இடிந்தகரை கடற்பகுதியில் போராட்டம் நடத்தினர். இப்படி, கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி முதல் கட்ட போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து இன்றோடு 100 நாள் ஆகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக