புதுடெல்லி:குஜராத் மோடி அரசின் போலீஸ் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் 20க்கும் மேற்பட்ட போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளது. இதில் பெரும்பாலும் முதல்வர் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர்-இ-தய்யிபா போராளிகள் மற்றும் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றவர்கள் போன்ற பொய்க் கதைகளை கூறி இவ்வளவு படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர்.
இந்த கொலைகள் எல்லாம் கடந்த 2002 மற்றும் 2006 ஆம் ஆண்டிற்கு இடையே நடந்தவைகளாகும்.
2002 அக்டோபர் 22-ஆம் தேதி சமீர்கான் பத்தான் என்பவரை கொலைச் செய்து குஜராத்தின் மோடி போலீஸ் போலி என்கவுண்டர் படுகொலைகளை துவக்கி வைத்தது. ஒரு போலீஸ்காரரை கத்தியால் குத்திய வழக்கில் சமீர் பத்தானை கத்தியால் குத்திய சம்பவத்தை நடித்துக் காட்டவேண்டும் என பொய் கூறி சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவ்விடத்தில் வைத்து போலீஸ்காரரின் துப்பாக்கியை பறித்து தப்பி ஓட முயன்ற பத்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற பொய்க் கதையை பரப்பினர். இதுத் தொடர்பான வழக்கு நடந்துவருகிறது.
அஹ்மதாபாத் கேலக்ஸி தியேட்டருக்கு அருகே 2003 ஜனவரி 13-ஆம் தேதி ஸாதிக் ஜமால் மெஹ்தர் என்பவரை மோடியின் போலீஸ் போலி என்கவுண்டரில் படுகொலை செய்தது. மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளி என பொய் கூறி இந்த படுகொலை நிகழ்ந்தது. ஆனால் பாவ் நகரில் ஸ்கூட்டர் வியாபாரியாக வாழ்க்கையை ஓட்டியவர்தாம் ஸாதிக் ஜமால் மெஹ்தர்.
2004-ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், ஸீஷான் ஜோஹர், அம்ஜத் அலி ராணா ஆகியோரை மோடியின் போலீஸ் அநியாயமாக சுட்டுக் கொலைச் செய்தது. இவர்களை அஹ்மதாபாத்திற்கு வெளியே உள்ள ஒரு விவசாய பண்ணையில் வைத்து கொலைச் செய்த பிறகு போலீஸ் அஹ்மதாபாத்திற்கு அருகே உள்ள நரோடா பகுதிக்கு இறந்த உடல்களை கொண்டுவந்து அதிகாலை நான்கு மணிக்கு போலி என்கவுண்டர் நாடகத்தை அரங்கேற்றினர். இவர்களும் மோடியை கொலைச் செய்யவந்த லஷ்கர் போராளிகள் என மோடியின் போலீஸ் கூறியது.
அதனைத் தொடர்ந்து 2005-ஆம் ஆண்டு சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்ந்தது. நவம்பர் 26-ஆம் தேதி அதிகாலை நரோல் க்ராஸிங்கில் இந்த போலி என்கவுண்டர் படுகொலை நிகழ்த்தப்பட்டது. சொஹ்ரபுத்தீன் ஷேக்கையும், அவரது மனைவி கெளஸர் பீயையும் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேரை படுகொலைச் செய்த அதே விவசாய பண்ணை வீட்டில் வைத்து கொலைச் செய்ததாகவும், சொஹ்ரபுத்தீன் மனைவி கெளஸர் பீயை கொலைச் செய்யும் முன்பு மோடியின் போலீஸ் மிருகங்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர் என்பதும் பின்னர் நிரூபணமானது. கவுஸர் பீயை கொலைச் செய்து தீயிலிட்டு கொளுத்தியுள்ளனர்.
இந்த போலி என்கவுண்டர் படுகொலைக்கு சாட்சியான போலீஸ் இன்ஃபார்மர் துளசிராம் பிரஜாபதியை கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி படுகொலைச் செய்தனர்.
2006-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி காந்தி நகர் போலீஸ் சவுராஷ்ட்ராவை சார்ந்த ரஹீம் காஸிம் ஸம்ராவை போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்தனர்.
2006 மார்ச் 17-ஆம் தேதி வாத்வாவில் வைத்து நான்கு முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகள் என குற்றம் சாட்டப்பட்டு மோடியின் போலீசாரால் போலி என்கவுண்டரில் படுகொலைச் செய்யப்பட்டனர். கொலைச் செய்யப்பட்டது யார் என அடையாளம் காணப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக