வியாழன், நவம்பர் 24, 2011

அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக ஷெர்ரி ரெஹ்மான் நியமனம்

இஸ்லாமாபாத் : அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக அந்நாட்டு முன்னாள் பெண் அமைச்சர் ஷெர்ரி ரெஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்தவர் உசைன் ஹக்கானி. கடந்த மே மாதத்தில், அமெரிக்க ராணுவ தலைவர் மைக் முல்லனுக்கு ஒரு கடிதம் வந்தது.பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றக் கூடும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
அந்த கடிதத்தை அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசைன் அனுப்பியதாக தகவல் வெளியானது. அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் மன்சூர் இஜாஸ் அதை அனுப்பியதாகவும் கூறப்பட்டது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, உசைன் ராஜினாமா செய்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக