வெள்ளி, நவம்பர் 25, 2011

சீக்கிய வாலிபர் சிக்கினார் பவாருக்கு பளார்!!!

புதுடெல்லி : ஊழல் வழக்கில் கடந்த வாரம் சிறை சென்ற முன்னாள் அமைச்சர் சுக்ராமை தாக்கிய ஹர்விந்தர் சிங் என்ற வாலிபர், மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாரை நேற்று தாக்கினார். பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார், டெல்லி நகராட்சி கவுன்சில் அரங்கத்துக்கு நேற்று காலை சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின் நிருபர்களுக்கு பேட்டியளித் தபடி வெளியே வந்தார்.
அப்போது அவர் அருகே சென்ற சீக்கிய வாலிபர் ஒருவர், திடீரென பவாரின் கன்னத்தில் ஓங்கி அறைந் தார். 

இதனால் பவார் நிலைகுலைந்தார். இருந்தா லும், தாக்கப்பட்ட சம்பவத்தை பெரிதுபடுத்தாமல் அரங்கத்தை விட்டு வெளியேறி காரில் சென்றார். தாக்குதல் நடத்திய வாலிபரை அரங்கத்தில் இருந்த பாதுகாவலர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது கூச்சலிட்ட வாலிபர், ‘‘ஊழல், விலைவாசி உயர்வால் ஆத்திரம் ஏற்படுகிறது. சரத்பவார் ஊழல்வாதி. அவரை அறைவதற்காகவே திட்டமிட்டு இங்கு வந்தேன்ÕÕ என்றார். அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். 

விசாரணையில் அந்த வாலிபர், ஊழல் வழக்கில் கடந்த வாரம் சிறை சென்ற முன்னாள் அமைச்சர் சுக்ராமை நீதிமன்ற வளாகத்தில் தாக்கியவர் எனத் தெரிந்தது. இந்த தாக்குதல் குறித்து பேட்டியளித்த சரத்பவார், ‘‘நிருபர்கள் கூட்டத்தின் நடுவில் அந்த வாலிபர் நின்று கொண்டிருப்பதை பார்த்தேன். 

என்னைச் சுற்றி பாதுகாவலர்கள் இல்லாதது அவருக்கு சாதகமாகி  விட்டது. இது முட்டாள்தனமான செயல். இது தொடர்பாக நான் புகார் தெரிவிக்கப் போவதில்லை. அதை போலீசார் பார்த்துக் கொள்வர்’’ என்றார். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ், பாஜ, கம்யூனிஸ்ட் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்Õ என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக