செவ்வாய், நவம்பர் 29, 2011

2ஜி: ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வாவுக்கும் ஜாமீன் கிடைத்தது

Shahid Balwaடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வாவுக்கு ஜாமீன் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை என்று சிபிஐ கூறியது. இதையடுத்து அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
பல்வாவும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் ஆர்.கே. சண்டோலியாவும் ஜாமீன் கோரி

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

இகில் பல்வாவின் மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 டெலிகாம் நிறுவன அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதால் பல்வாவுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரினார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்வா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டதால், அவரது ஜாமீனுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, பல்வாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதே போல ஆர்.கே. சண்டோலியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று நடக்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக