வெள்ளி, நவம்பர் 25, 2011

6.1 ரிக்டர் பதிவானது ஜப்பானில் மீண்டும் பூகம்பம்

டோக்கியோ : ஜப்பானில் நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளியாக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல் வரவில்லை. 
ஜப்பானின் வடக்கு பகுதி தீவு ஹொக்கிடோ. அங்கு நேற்று பூகம்பம் உலுக்கியது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியேறினர். சூப்பர் மார்க்கெட்கள், வீடுகளில் பொருட்கள் கீழே விழுந்து சிதறி ஓடின.



ரிக்டர் அளவுகோலில் பூகம்பம் 6.1 புள்ளியாக பதிவானதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. தலைநகர் டோக்கியோவில் இருந்து 750 கி.மீ. தொலைவில் பூகம்பத்தின் மையம் இருந்ததாக கூறப்பட்டது. பூகம்பத்தால் ஏற்பட்ட சேத விவரம் மதிப்பிடப்பட்டு வருகிறது. இதுவரை ஜப்பானில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மார்ச் மாதம் 9.0 புள்ளியாக பதிவான பயங்கர பூகம்பம், 

சுனாமி தாக்குதலுக்கு 20,000 பேர் பலியாகினர். புகுஷிமா அணுஉலை வெடித்து கதிர் வீச்சு வெளியானது. பசிபிக் கடலில் ஜப்பான் அமைந்துள்ள பகுதி பூகம்பம் மற்றும் எரிமலை மண்டலமாக கருதப்படுகிறது. உலகில் ஏற்படும் பூகம்பங்களில் 90 சதவீதம் இங்கு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக