ஞாயிறு, நவம்பர் 27, 2011

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?

 மக்களின் பரபரப்பான போராட்டங்கள், மக்கள் போராட்டத்தை ஒடுக்க தேசதுரோகம், ராணுவநடவடிக்கை என்று அரசின் மிரட்டல்கள்,  தினமலரின் தமிழர்விரோத, மக்கள்விரோத பிரசாரங்கள்  என்று நகர்கிறது கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விடயம். கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானதா? இல்லையா?  பார்ப்போம் .விஞ்சான பார்வை: மன்னார் வளைகுடா கடலின் தரைபகுதியில்  70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு  உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன.
1982 ஆம் ஆண்டில் வில்லியம் வெஸ்டால் மற்றும் லௌரீ என்ற இரு ஆய்வாளர்கள் இதை  கண்டுபிடித்தனர். 1994 ஆம் ஆண்டில் இந்த வண்டல் குவியல்களின் அடிப்பகுதியில் எரிமலைகள் இருப்பதும்  கண்டுபிடிக்கப்பட்டது. 

ஏதாவது சிறிய நிலநடுக்கம் ஏற்ப்பட்டாலும் இந்த வண்டல் குவியல்கள் சரிந்து சுனாமி பேரலைகளை உருவாக்கும், அதேநேரம் அந்த மணல் திட்டுகளின் அடியில் இருக்கும் எரிமலையும் வெடிக்ககூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய அணுசக்திக் கழகம் இந்த வண்டல் குவியல்களினால் ஏற்பட உள்ள  பேரிழிவு பற்றி  ஆய்வு செய்ய  இன்றளவும் மறுத்து வருகிறது. இதுதான் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த ஒரு தெளிவான விஞ்சான பார்வை. 

வரலாற்று பார்வை: காமராஜர் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராகவும், தமிழக முதல்வராகவும்  இருந்த காலத்தில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அவருக்கு பின்னால் அண்ணா, எம்.ஜி.ஆர்,  கருணாநிதி ஆட்சிகளில் மத்திய அரசால் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. அதனாலேயே கருணாநிதி வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று சொன்னார்.

அந்த காலகட்டங்களில் பலநல்ல திட்டங்கள் வட மாநிலங்களை  நோக்கி கொண்டு சொல்லப்பட்டன.  அதில் ஒன்றுதான் போபால் ஆனால் போபால் விசவாய்வு கசிவால் விழித்துக்கொண்ட வட இந்தியர்கள்  இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் திட்டங்களை  தமிழகத்தை நோக்கி தள்ளிவிட்டனர். அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்  என்கிற தாமிர உருக்கு ஆலை, மற்றும் ஆறுமுகநேரி DCW என்கிற தாரங்கதாரா கெமிக்கல் வொர்க்ஸ், போன்றவைகள் அடங்கும்.

இந்த ஆலைகளின் முதலாளிகள் குஜராத்திகள் என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம். உண்மைகள் இப்படி இருக்க   அணுவுலைக்கு எதிரான இந்த மாபெரும் மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் கீழ்த்தரமான வேலையை  தினமலர் தொடர்ந்து செய்து வருகிறது. இந்த அணுவுலை ஆபத்தானதில்லை என்று போலியான வாதங்களை முன்வைத்தும், அதே நேரம் இந்த போராட்டத்தை பற்றியும் அதை நடத்தும் மக்கள் தலைவர்களை பற்றியும் தினமலர் இழிவான செய்திகளை வெளியிட்டு வருகின்றது. 

அதன் ஒரு பகுதியாக அந்த போராட்டத்தின் தலைவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக ஒரு குற்றச்சாட்டையும், அதில் ஈடுபட்டுள்ள ஒரு பாதிரியாரின் சொத்து கணக்கு பற்றியும் அவர்களது வீட்டு முகவரி தொலைபேசி இலக்கங்களையும் தினமலரில் வெளியிட்டு அவர்களுக்கு ஆபத்தை உண்டாக்க திட்டமிடுகிறது. இதே அணு உலை காஞ்சி சங்கரமடத்திற்கு அருகாமையிலோ அல்லது  ஸ்ரீரங்கத்திலோ நிருவப்படுமே ஆனால் தினமலரின் வேடம் சேதுசமுத்திர திட்டத்தில் ராமர் பாலம் என்றது போல் கலைந்திருக்கும்.

ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது  தினமலர். அதே நேரம் மும்பையில் தமிழர்களை, குஜராத்திகளை  ஹிந்துத்துவா சிவசேனைகாரர்கள்  அடித்து துரத்தியபோது மவுனம் காத்தது, கர்நாடகா தண்ணீர் தராதபோதும், தமிழகத்துக்கு நன்மைதரும் சேதுசமுத்திர திட்டத்தை அமுல்படுத்த தடையாக ராமர் பாலம் கதை சொல்லியும்  ஹிந்துதுவாவுக்கு ஆதரவாக செயல்பட்டது. 

இவ்வளவு நாளும் மவுனம் காத்த மக்கள் இப்போது ஏன் எதிர்கிறார்கள்
 என்று தினமலர் ஒரு பொய்யான கேள்வியை முன்வைகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்கப்பட்டது முதல் மக்கள் எதிர்ப்பு என்பது இருந்தே வந்தது. விஞ்சான வளர்ச்சி அடைந்த ஜப்பானில் அணு உலையினால் ஏற்ப்பட்ட ஆபத்தை பார்த்ததும் ஜப்பானுக்கே இந்த கதியா என்று அஞ்சிய மக்களின் போராட்டம் மேலும்  வலுவடைந்தது.  

மேலும் போபால் விசவாய்வு கசிவு நடந்து 25 ஆண்டுகளை கடந்தும் அந்த மக்களுக்கு சரியான நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் ரஷ்யாவால் வடிவமைக்கப் பட்ட மற்றைய அணுவுளைகளால் ஏற்ப்பட்ட விபத்துக்கள், கூடங்குளம் பகுதி நிலநடுக்கம், மற்றும் சுனாமிக்கு வாய்ப்புள்ள பகுதி போன்ற காரணங்களே எல்லாராலும் இந்த திட்டம் வெறுக்கப்பட காரணமாக அமைந்தது. 

கூடங்குளம் அணுமின் நிலையம் எவ்வளவு ஆபத்தானதோ! அதுபோல் தினமலர் என்கிற விஷ செடியும் தமிழகத்துக்கு ஆபத்தானது. அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தோடு தினமலருக்கு எதிரான போராட்டங்களையும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும். தினமலர் என்கிற விஷ மலரை வாங்குவதை தமிழர்கள் நிறுத்த வேண்டும். தமிழர் விரோத இந்த பத்திரிக்கையை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும்.



நட்புடன் : ஆசிரியர் புதியதென்றல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக