திங்கள், நவம்பர் 28, 2011

நேட்டோவின் மன்னிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்' : பாக். ராணுவம்

li-pakistan-coffin-620-ap16இஸ்லாமாபாத்: அமெரிக்க கூட்டுப்படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 24 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு நேட்டோ கோரிய மன்னிப்பை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு மலைபகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ சோதனை சாவடி மீது அமெரிக்க கூட்டுப்படையான “நேட்டோ” ஹெலிகாப்டர்கள்

குண்டு வீசி தாக்கின. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 ராணுவ மேஜர்கள், ஒரு கேப்டன் உள்பட 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். 11 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், உடனடியாக நேட்டோ படையினருக்கு உணவு எடுத்துச்செல்லும், 2 எல்லை பகுதிகளும் அடைக்கப்பட்டன. இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் மீது நேட்டோ ஹெலிகாப்டர்கள் நடத்திய குண்டு வீச்சு சம்பவத்தில் பலியான வீரர்களுக்கு  அமெரிக்கா சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்திடம் நேட்டோ மன்னிப்பு கோரியது. மேலும், நேட்டோ கோரிய மன்னிப்பை ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக