ஞாயிறு, நவம்பர் 27, 2011

துபாய்: மெட்ரோவில் உறங்கினால் 300 திர்ஹம் அபராதம்!!!


துபாய் மெட்ரோ தொடர்வண்டி பயணத்தில் உறக்கத்தில் ஆழ்ந்து, இறங்க வேண்டிய நிலையம் தாண்டிப் பயணித்த பெண்ணொருவருக்கு 300 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்த தன் பெற்றோரைக் காணவந்துள்ள அப்பெண், காலித் பின் வலீத் நிலையத்தில் ஏறி, தூங்கிவிட்டதால் தான் இறங்க வேண்டிய இபுனு பதூதா நிலையம் தாண்டியும் பயணித்துள்ளார். ஜெபல் அலி நிலையத்தில் பரிசோதகர் வந்து எழுப்பிவிட்டு, அப்பெண்ணுக்கு 300 திர்ஹம் அபராதம் விதித்துள்ளார்.


துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள வழிகாட்டி நூலில் செய்யக்கூடாதவைகளாக 31 செயல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை மீறிச் செய்தால் 100 திர்ஹம் முதல் 2000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும், வண்டியில் உறங்குவது பற்றி அதில் குறிப்பிட்டிருக்கவில்லை. அதே சமயம், காத்திருப்பு தளங்கள்,  தங்குமிடங்கள், மெட்ரோ நிலைய்ங்கள் ஆகியவற்றில் உறங்கினால் அபராதம் விதிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.
துபாய் மெட்ரோ விதிகளை அறியhttp://www.rta.ae/dubai_metro/:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக