வியாழன், நவம்பர் 24, 2011

டேம் 999 திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை!!!

சென்னை : டேம் 999 திரைப்படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் நேற்று தெரிவித்தது. சென்னையில் நடந்த தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இவ்வாறு புடிவு செய்யப்பட்டுள்ளது. பழைமையான அணை உடைவதை பயமுறுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ள டேம் 999 படத்திற்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது
. இப்படத்திற்கு பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் முக்கிய பாசன ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணையை இடித்துவிட வேண்டும். புதிய அணை கட்டி நீர் முழுவதையும், தாங்களே பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக, கேரள அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ‘டேம் 999’ என்ற பெயரில் ஆங்கில படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தை இந்தியாவில் திரையிட தடைவிதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை, தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுப்பட்டது.

இந்நிலையில் மக்கள் பீதிக்கு உள்ளாக்கும் இந்த படத்தை திரையிட தமிழ அரசு தடை விதித்துள்ளது. அணை உடைவதை பயமுறுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இந்த படம் தடைசெய்யப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக