டமாஸ்கஸ்:சிரியாவின் ஆளுங்கட்சியான பாஅத் கட்சியின் டமாஸ்கஸில் உள்ள தலைமையகத்தை தாங்கள் தாக்கவில்லை என புரட்சி ராணுவமான ‘ஃப்ரீ சிரியன் ஆர்மி’ கூறியுள்ளது.துருக்கியை மையமாக கொண்டு செயல்படும் ஃப்ரீ சிரியன் ஆர்மியின் தலைவர் ரியாத் அல் ஆஸாத் முன்னர் வெளியிட்ட அறிக்கைக்கு மாற்றமாக நேற்று மறுப்பு வெளியிட்டுள்ளார்.
நேற்று முன் தினம் பாஅத் கட்சியின் தலைமையகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பொறுப்பை முதலில் ஃப்ரீ சிரியன் ஆர்மி ஏற்றுக்கொண்டது. ஆனால்,அரசு எதிர்ப்பு போராட்டத்தை சீர்குலைக்கத்தான் பாஅத் கட்சியின் தலைமையகத்தை ஃப்ரீ சிரியன் ஆர்மி தாக்கியதாக பரப்புரை செய்யப்படுகிறது என ரியாத் குற்றம் சாட்டியுள்ளார்.ஃபேஸ் புக்கில் இவ்வமைப்பின் பக்கத்தில் போஸ்ட் செய்யப்பட்ட வீடியோவில் அல் ஆஸாத் விளக்கமளித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக