சனி, செப்டம்பர் 29, 2012

நித்தியானந்தாவால் மதுரை ஆதீனம் பறிபோகிறது- அரசு கையகப்படுத்துகிறது !

சென்னை: நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்ததில் உரிய விதிகள் பின்பற்றப்படாத மதுரை ஆதீனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக வழக்குத் தொடர இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வழக்கு என்ன? மதுரை அருணகிரிநாதர், நித்தியானந்தாவை இளைய மடாதிபதியாக நியமித்ததை எதிர்த்து பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜெகதலபிரதாபன் என்பவர் தமது மனுவில், குற்ற வழக்குகளில் சிக்கியநித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்ததில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று புகார் கூறியிருந்தார்.இந்த மனுவுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஏற்கனவே பதில் மனு தாக்கல்

மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூட்டத்தில் 'கரண்ட் கட் என்ன கொடுமை சார் இது !

சிவகங்கை: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலந்து கொண்ட கூட்டத்தில் 3 முறை மின்தடை ஏற்பட்டதால், அமைச்சரும், கட்சி நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர். சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் கரு.முருகானந்தம் தலைமையில் சிவகங்கையில் நாடளுமன்ற தொகுதி ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது., நிர்வாகிகள் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். இதனால் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. இந்த கூட்டத்தில் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்த போது, 2 முறையும், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசிய

தடாலடி பிறந்தநாள்... 'நான் சி.எம்' சவடால்.. மேயருடன் மோதல்.. ஜெயக்குமாருக்கு "ஆப்பு" !

சென்னை: தமிழக சபாநாயகர் பதவியிலிருந்து ஜெயக்குமார் இன்று ராஜினாமா செய்ததன் பின்னணியில் ஏராளமான சுவராஸ்ய தகவல்கள் இருக்கின்றன. ஜெயக்குமாரின் ராஜினாமாவுக்கு சொல்லப்படும் காரணங்கள் குறித்து ஒரு பார்வை..   காரணம் 1- பிறந்த நாளில் 'எமகண்டம்': கடந்த செப்டம்பர் 18ம் தேதியன்று சபாநாயகர் ஜெயக்குமாரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையை மிரட்டின. அதிமுகவைப் பொறுத்தவரையில் பிரமுகர்களாக இருந்தாலும் கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகிவிட நேரிடும் என்பதால் தடபுடலுக்கு

ராஜ் தாக்கரேக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் – டெல்லி மாநகர் நீதிமன்றம் !

புதுடெல்லி:வட இந்தியர்கள் குறிப்பாக பீகார் மாநிலத்தவர்களை குறித்து இழிவாக பேசிய மஹராஷ்ட்ரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை டெல்லி மாநகர நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வடமாநில மக்களை இழிவாக பேசிய ராஜ்தாக்கரே மீது ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் தாக்கேரவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை அவர் தாக்கல்

இறைத்தூதரை அவமதித்த திரைபடத்தை இயக்கிய அயோக்கியன் கைது !

லாஸ் ஏஞ்சல்ஸ்:இஸ்லாத்தின் இறைத்தூதரை இழிவுப்படுத்தும் விதமாக திரைப்படத்தை இயக்கி தயாரித்த நகவுலா பாசிலி நகவுலா என்பவனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வங்கி மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட நகவுலா, நன்னடத்தை விதிகளை பேணவில்லை என்ற காரணத்தால் கலிஃபோர்னியா போலீஸ் அவனை கைது செய்துள்ளது. கடந்த வியாழக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நகவுலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததால் சிறையில் அடைக்கப்பட்டான். ஐந்து ஆண்டுகாலம் கம்ப்யூட்டர் மற்றும் இணையதளத்தை

பிரதமர் மன்மோகன் சிங்கை கேலி செய்த மம்தாபானர்ஜி மீது சட்ட நடவடிக்கை. காங்கிரஸ் முடிவு !

தனியார் 'டி.வி.'க்கு மம்தா பானர்ஜி பேட்டி அளித்தபோது, பிரதமர் மன்மோகன்சிங் போல் மிமிக்ரி செய்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் விலகியது. மந்திரி சபையில் இருந்தும் வெளியேறியது. மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்

மேற்குவங்கத்தில் வெளிநாட்டவர்கள் கடைகள் திறக்க தடை. மம்தாவின் அதிரடியால் வால்மார்ட் அதிர்ச்சி !

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கு வங்கத்தில், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நடத்துவதை தடை செய்யும் தீர்மானம், அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் நுழைய முடியாதபடி சட்டசபையில் தீர்மானம் இயற்றப்பட்டது. சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் முடிவை, மத்திய அரசு சமீபத்தில் எடுத்தது. இந்த முடிவுக்கு, பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், மேற்கு வங்க முதல்வரும்,

பிரதமர் உத்தரவுப்படி காவிரியில் 9000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு !

டெல்லி: காவிரி நதி நீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுத்த கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பிரதமரின் உத்தரவுப்படி கர்நாடக அரசு அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கடந்த 19ம் தேதி பிரதமர் தலைமையில் காவிரி

சிரியாவில் இரத்தக் களரி: ஒரே நாளில் 305 பேர் படுகொலை !

டமாஸ்கஸ்:சர்வாதிகாரி பஷாருல் ஆஸாதிற்கு எதிரான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் நேற்று முன்தினம்(புதன் கிழமை) மட்டும் 305 பேர் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இதில் சாதாரண அப்பாவி மக்கள் 199 பேர் அடங்குவர். பஷாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டம் துவங்கிய பிறகு ஒரேநாளில் அதிகம் பேர் இப்பொழுதுதான் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவில் மனித உரிமை

சட்டசபை வைர விழா கூட்டத்தை ஸ்தம்பிக்க வைக்க சென்னையில் முற்றுகை... கூடங்குளம் குழு அறிவிப்பு !

கூடங்குளம்:கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி, அக்டோபர் 29-ம் தேதி தமிழக சட்டப் பேரவையை முற்றுகையிடப் போவதாக, அரசியல் கட்சிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்ற அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சனுக்கு புகழாரம் சூட்டும் ஜமாஅத்தே இஸ்லாமியின் அதிகாரப்பூர்வ ஏடு !

புதுடெல்லி:சங்க்பரிவார பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸின் மறைந்த முன்னாள் சர்சங்க்சாலக் (தேசிய தலைவர்) கு.சி.சுதர்சனுக்கு ஜமாஅத்தே இஸ்லாமியின் அதிகாரப்பூர்வ ஏடான தஃவத் புகழாரம் சூட்டியுள்ளது. சுதர்சனின் மரணத்தில் மிகுந்த துக்கம் அடைவதாக அப்பத்திரிகையின் தலையங்கத்தில் ‘கபர் ஓ நதர்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக அப்பத்திரிகையில்

கஷ்மீர் மக்களின் கண்ணியமான வாழ்வை உறுதிச்செய்வோம் – குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி !

ஸ்ரீநகர்:வன்முறை எனும் இருள் கடந்து போனதாக இருக்கட்டும். புதிய விடியலை உருவாக்க பாடுபடுவோம் என்று கஷ்மீர் மக்களுக்கு இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்புவிடுத்துள்ளார். ஜம்மு கஷ்மீர் மாநிலத் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள கஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியது: “ஜம்மு-கஷ்மீரில் உள்ள அனைவரும் சம

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு! அதிர்ச்சியில் தினமலர் !

பதிமூவாயிரம் ஆயிரம் கோடி அல்ல மக்களின் உயிர்தான் முக்கியம் சுப்ரிம்கோர்ட் அதிரடி உத்தரவு.  இச்செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளது தினமலர்நாளிதழ்.சென்னை உயர்நீதி மன்றத்தில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டஅனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.  ஆனால் அதை எதிர்த்து டெல்லி உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு வெற்றி தரும் உத்தரவை உச்ச நீதி மன்றம் வழங்கி உள்ளது. அணுஉலைக்கு எவ்வளவு பணம் முதலீடு செய்திருந்தாலும் மக்கள் பாதுகாப்பு

பழிவாங்கும் நடவடிக்கையை நிறுத்துங்கள்: அமெரிக்காவுக்கு, விக்கிலீக்ஸ் அதிபர் அசாங்கே வேண்டுகோள் !

அமெரிக்கா தூதரகங்கள் மற்றும் ராணுவம் இடையே நடைபெற்ற ஆயிரக்கணக்கான ரகசிய உரையாடல் தகவல்களை சேகரித்து அதனை தனது விக்கிலீக் இணையதளத்தின் மூலம் அம்பலப்படுத்தியவர் அசாங்கே. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது. இதனால் அவர்

மோடி குஜராத்தில் அரங்கேற்றிய கொடூரத்தைப் பார்த்துவிட்டு என் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிந்தது : குல்தீப் நய்யார் !

காத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்... பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல்  கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்... இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் 'ஸ்கூப்’கள் இவை. இவர் சமிபத்தில்  வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி  நம் ஆசிய நண்பன் வாசகர்களுக்கு தருகிறோம் இதோ

பரிசுப் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். பிரதிபா பட்டேலுக்கு அரசு உத்தரவு !

பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பதவிக்காலம் முடிந்து ராஷ்ட்ரபதி பவனை விட்டு வெளியேறுகையில் கிட்டத்தட்ட 40 லாரிகளில் தனக்கு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏற்றிச் சென்றார். அந்த பொருட்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அமராவிதியில் உள்ள

வியாழன், செப்டம்பர் 27, 2012

அது வேற வாயி.. இது வேற வாயி''... அன்னிய முதலீடு குறித்து பாஜக அடித்த பல்டி !

ஹரியாணா மாநிலம், சூரஜ்குண்ட் நகரில் பாஜகவின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட 300 செயற்குழு உறுப்பினர்களுடன் நாடு முழுவதிலும் இருந்து 1200 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய கட்காரி, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை பாஜக கடுமையாக

அஹ்மதாபாத் வழக்கில் 11 முஸ்லிம்களை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு !

புதுடெல்லி:ஒரு நபரின் மதத்தை பார்த்து அவருக்கு கொடுமை இழைக்க சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாதீர் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி குஜராத் மாநில தடா நீதிமன்றம் தண்டித்த 11 அப்பாவி முஸ்லிம்களை 10 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச்செய்த வழக்கில் நீதிபதிகளான ஹெச்.எல்.தத்து, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பில் கூறியது. 1994-ஆம் ஆண்டு ஜூன் மாதம் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில்

மக்களுக்கு பாதுகாப்பு இல்லையெனில் கூடங்குளத்தில் அணு உலை மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் சுளீர் !

புதுடெல்லி:கூடங்குளம் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பில் வீழ்ச்சி ஏற்பட்டால் அணுமின்நிலையத்தின் பணிகளை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா நாட்டு உதவியுடன் ரூ.13 ஆயிரத்து 615 கோடி செலவில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க அந்த

ரிட்டையராகும் விஜயகுமார் ஐ.பி.எஸ்.! வீரப்பன் கதையை 300 பக்க நாவலாக எழுத திட்டம் !

டெல்லி: மத்திய ரிசர்வ் படை இயக்குநராக இருக்கும் விஜயகுமார் இந்த மாதம் 30-ந் தேதியுடன் ஓய்வுபெற உள்ள நிலையில் சந்தனக் கடத்தல் வீரப்பனை மையமாக வைத்து ஒரு நாவல் ஒன்றை எழுத உள்ளார். சி.ஆர்.பி.எப். தலைமையகத்தில் விஜயகுமார் பணி ஓய்வு பெறும் நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கை சி.ஆர்.பி.எப்.ப்பின் அனைத்து பிரிவுகளுக்கும் நேற்று

இடிந்தகரையில் மணல் சமாதி போராட்டம்... மணலில் புதைந்து வைகோவும் பங்கேற்பு !

இடிந்தகரை: கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரையில் கிராம மக்கள் கழுத்தளவு மணலில் புதைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அணுஉலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் பங்கேற்றனர். அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெற்று வரும் நிலையில் அணுஉலைக்கு எதிரான போராட்டமும்

ஹிலாரி ஒரு உணர்ச்சியில்லாத ஜடம். கிளிண்டனின் சுயரூபத்தை வெளிப்படுத்தும் முன்னாள் காதலி மோனிகா !

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுடன் நடத்திய காதல் களியாட்டத்தை, புத்தகத்தில் கொட்டித் தீர்க்க முடிவெடுத்துள்ளார், அவரின் முன்னாள் காதலி மோனிகா லெவின்ஸ்கி. அமெரிக்காவில், 1993 முதல், 2001ம் ஆண்டு வரை, அதிபராக இருந்தவர், பில் கிளின்டன். ஜனநாயக கட்சி சார்பில், பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில், 1993ல், அதிபர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளின்டன், இரண்டாவது முறையும், அதிபர் பதவியை கைப்பற்றி சாதனை படைத்தார். ஆட்சியின் கடைசி காலத்தில், செக்ஸ் புகாரில் சிக்கி, பார்லிமென்டில், கண்டனத் தீர்மானம்

கை நீட்டினாலே போதும். ஏ.டி.எம் மிஷினில் பணம் வரும். ஜப்பானில் அறிமுகம் !

ஏடிஎம் கார்டை வீட்டில் மறந்து வைத்து விட்டால் இனி கவலையில்லை. கையை நீட்டினாலே பணம் தரும் ஏடிஎம் விரைவில் வர இருக்கிறது. இப்போது ஐப்பானில் இந்த நவீன ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் புதிய முறை, கிஃபு மாகாணத்தில் ஒகாகி கியோரிட்சு வங்கியில் தொடங்கப்பட்டுள்ளது.இம்முறையில், கை ரேகைகளை ஸ்கேன் செய்து வங்கியில் பதிவு செய்யப்படும். மேலும் பிறந்தநாள் மற்றும் ஏடிஎம் "பின் (ரகசிய) நம்பர்' உள்ளிட்டவையும் வங்கியில் பதிவு செய்வது அவசியம். கார்டு இல்லாமல், ஏடிஎம் மையத்தில் கை ரேகையை பதிவு செய்து பணம் எடுப்பது,

ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடி முற்றியது: போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு !

ஸ்பெயினில் பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீஸôர் ரப்பர் தோட்டாக்களால் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஸ்பெயினில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது. இந்த நெருக்கடி காரணமாக லட்சக்கணக்கானோர் வேலையிழந்து தவிக்கின்றனர். ஏராளமான குடும்பங்கள் ஏழ்மை நிலைக்குத்

தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...

இன்றைய இளைஞர்களுக்கு விரைவிலேயே தலை கூந்தல் உதிர்ந்து, வழுக்கை ஆகிவிடுகிறது. அதில் ஆண்கள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று பார்த்தால், பெண்களில் சிலருக்கும் ஏற்படுகிறது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டாலும், சரியான காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. கூந்தல் உதிர்தலுக்கான காரணத்தை அறிவதில் எவ்வளவு கூர்மையாக இருக்கிறீருகளோ, அதேப்போல் தலை

சீனாவிலிருந்து கொசு பேட், பொம்மை மட்டுமல்ல இப்போது சவப்பெட்டியும் வந்து விட்டது !

திருவனந்தபுரம்: சீனாவிலிருந்து மலிவு விலை மற்றும் அபாயகரமான பொம்மைகள், எலக்ட்ரானிக் கொசு பேட் உள்ளிட்டவற்றை இந்திய மார்க்கெட்டை கலக்கி வரும் நிலையில் தற்போது சவப்பெட்டிகளையும் அங்கிருந்து இங்கு கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீனாவிலிருந்து ஒரு குண்டூசி கூட இந்தியாவுக்கு வந்ததில்லை. ஆனால் இந்தியாவின் தாராளமயமாக்கல்

யூனிட்டுக்கு 6 பைசா மீண்டும் உயரப் போகிறது மின் கட்டணம்.. தயாராகுங்கள் !

சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் கடந்த ஏப்ரல் மாதம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டது. அதிக கடன் சுமையில் இருந்து மின் வாரியத்தை மீட்கவும் புதிய மின் உற்பத்தி நிலையங்களை தொடங்கவும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்தது. ஆனால், தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான மின் பற்றாக்குறைக் காரணமாக  கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்கியது மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்த வகையில் மட்டும் மின் வாரியத்துக்கு ரூ.1,623 கோடி

பாலஸ்தீன் அகதி முகாம்களில் தீ விபத்து மூன்று வயது சிறுவன் பலி . . .

காஸா: கடந்த புதன்கிழமை (26/09/2012) காஸாவில் உள்ள பலஸ்தீன் அகதி முகாம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் மூன்று வயதுப் பாலகன் பலியாகியுள்ளான். ஃபாதி அல்பக்தாதி என்ற மேற்படி பலஸ்தீன் சிறுவனின் தந்தையும் (வயது 26), 1 1/2 வயதான சகோதரியும் மோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தொடர் முற்றுகை காரணமாக எரிபொருள், மின்சாரம், மருந்துப் பொருட்கள், கட்டிடப்பொருட்கள் முதலான அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவுசெய்ய முடியாமல், காஸாவில் வாழும் பலஸ்தீன் பொதுமக்கள்

புதன், செப்டம்பர் 26, 2012

குவைத்:தேர்தல் சட்டத்தைத் திருத்த உச்சநீதிமன்றம் மறுப்பு !

குவைத்:நாட்டின் தேர்தல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற அரசின் கோரிக்கையை குவைத் நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடிச் செய்துவிட்டது. 2006-ஆம் ஆண்டு அமலுக்கு வந்த தேர்தல் சட்டத்தை நீதிமன்றம் உறுதிச் செய்துள்ளது. தற்போதைய சட்டத்தில் திருத்தம் தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் தேர்தலை தங்களுக்கு அனுகூலமாக மாற்றுவதற்கான முயற்சியே தேர்தல் சட்ட சீர்திருத்தம் என்று

உணவுப் பொருட்கள் விற்பனை மோசடி: ராம்தேவின் நிறுவனத்திற்கு நோட்டீஸ் !

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி யோக மையம் மற்றும் திவ்ய யோக மந்திர் டிரஸ்ட் உள்ளது. இந்த டிரஸ்ட் சார்பில் உணவுப்பொருள் மற்றும் மருந்து பொருட்களை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து சப்ளை செய்யப்படும் உணவுப்பொருட்கள் தரமற்றதாக உள்ளன என்று அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் 6

உற்பத்தி சரிவு.. பிரேசிலில் இருந்து சர்க்கரையை இறக்குமதி செய்யும் இந்தியா !

மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக வெளிநாட்டிலிருந்து இந்தியா சர்க்க்கரையை இறக்குமதி செய்யவுள்ளது. இந்தியாவில் சர்க்கரையின் விலை டன் ஒன்றுக்கு 680 டாலரை எட்டியுள்ளது. அதே நேரத்தில் பிரேசிலில் சர்க்கரை விலை 500 டாலராக உள்ளது. இதையடுத்து சில சர்க்கரை ஆலைகள் பிரேசிலில் இருந்து அதை இறக்குமதி செய்ய உள்ளன. அடுத்த மாதம் முதல் இந்த சர்க்கரை இந்தியாவுக்கு வந்து சேரும். மொத்தம் 4,50,000 டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்படவுள்ளது. உலகில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. ஆனால், 2009-10ம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டதையடுத்து, குறிப்பாக மகாராஷ்டிரத்தில், இந்தியா அதை இறக்குமதி செய்தது. இதையடுத்து உலக அளவில்

தேர்தலில் 3 தடவைக்கு மேல் தோற்றவர்களுக்கு இனி டிக்கெட் கிடையாது: ராகுல் காந்தி !

டெல்லி: 3 தடவைக்கு மேல் தேர்தலில் தோற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட டிக்கெட் கொடுக்கப்பட மாட்டாது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் வரும் 2014ம் ஆண்டு நடைபெறவிருக்கிறது. இதையடுத்து தேர்தல் குறித்து ஆலோசிக்க ராஞ்சியில் நேற்று ஆலோசனை கூட்டம்

திருக்குர்ஆன், இஸ்லாமிய நூல்கள், பத்திரிகைகள் உங்கள் வசம் உள்ளதா? சிறைக்குச் செல்ல தயாராக இருங்கள் !

புதுடெல்லி: முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க அரபு மற்றும் உருது மொழியில் எழுதப்பட்ட நர்ஸரி புத்தகங்களையும், கவிதைகளையும் ஆதாரமாக காட்டும் இழிவான நிலைக்கு இந்திய போலீஸ் தள்ளப்பட்டுள்ளது. தடைச் செய்யப்படாத புத்தகங்களையும், திருக்குர்ஆன் வசனங்களையும், இஸ்லாத்தைக் குறித்த பாடப் புத்தகங்களையும் கைப்பற்றி இவை

ட்ரோன் தாக்குதல்: விபரீத பின்விளைவுகளை உருவாக்குகிறது – அமெரிக்க அறிக்கை !

வாஷிங்டன்:சி.ஐ.ஏ தலைமையில் அமெரிக்க ராணுவம் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானில் நடத்தி வரும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்கள் விபரீத பின்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், தாக்குதலில் பெரும்பாலும் அப்பாவிகள் பலியாவதாகவும் அமெரிக்க கல்வியாளர்களின் அறிக்கை கூறுகிறது. ஸ்டாண்ட்ஃபோர்ட், நியூயார்க் பல்கலைக்கழகங்கள் கூட்டாக நடத்திய ஆய்வின்

ஒரு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் 1300 சில்லறை சிறிய வியாபார கடைகளை பூட்டவைக்கும் !

புதுடெல்லி:சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூதலீடு இந்தியாவின் சமூக வாழ்க்கையில் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஒரு வால்மார்ட் சூப்பர் மார்க்கெட் மட்டுமே 1300 சிறிய சில்லரை வியாபார கடைகளை பூட்டவைத்து விடும் என்று பிரபல பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் ஒரு சூப்பர் மார்க்கெட் காரணமாக 3900 தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். வேலையில்லா திண்டாட்டத்தால் திக்குமுக்காடும் சமகால இந்தியாவில் சில்லறை

கோலாகலமாக நடந்த புருனே சுல்தானின் 5வது மகள் திருமணம் !

உலகில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர் புருனே சுல்தான். அவருக்கு 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர். இவர்களில் 5 வது மகள் ஹபிசாவுக்கு திருமணம் கோலாகலமாக நடந்தது. ஹபிசா மன்னர் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு 32 வயதாகிறது. தன்னைவிட 3

நான்கு அணு ஆயுத ஏவுகணைகளைச் சோதித்துப் பார்த்தது ஈரான் !

அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று பெரும் போர்க்கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கக்கூடிய நான்கு ஏவுகணைகளை ஈரான் சோதித்துப் பார்த்துள்ளது.  பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திவரும் இராணுவப் பயிற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பரிசோதனைகளை ஈரான் நிகழ்த்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஐம்பதே விநாடிகளில் மிகப் பெரிய போர்க்கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறம் படைத்தவை என்று

“அம்மா” “அப்பா” எனும் வார்த்தைகளுக்கு இனி ப்ரான்சிஸ் தடை !

பாரீஸ் : ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசாங்கம் அனைத்து விதமான அரசு ஆவணங்களிலிருந்தும் “அம்மா” “ அப்பா” எனும் வார்த்தைகளை நீக்க முடிவு செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.  வழமையாக ஆணும் பெண்ணும் திருமணம் செய்வது மரபு. சமீப காலமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் முன்னேற்றம் எனும் பெயரில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போக்குக்கு ஆதரவு பெருகி வருகிறது. இச்சூழலில் இப்படிப்பட்ட கலாசார பெருமைக்கு? தலைநகராக கருதப்படும் ப்ரான்ஸில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதை அரசு ஆதரிக்க தொடங்கியது. ஆனால் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள்

செவ்வாய், செப்டம்பர் 25, 2012

அமெரிக்க இராணுவத்தின் கஞ்சா பண்ணைகள். மாபியா வர்த்தகம் - ஆக்கிரமிப்பு இராணுவத்தின் நிழல் வியாபாரம் (புகைப்படங்கள் இணைப்பு)

இரவில் வந்து இறங்கும் அந்த இராணுவ விமானத்தில் இருந்து சில பார்சல்கள் மெல்ல விமான தளத்திற்குள் எடுத்து செல்லப்படாமல் சவலட் கார்களில் வரும் மாபியாக்களின் டிக்கியில் ஏற்றப்படுகின்றன. ஹவானா சுடுட்டு பிடிக்கும் கேர்ணலும், நவீன அல்காபோன்ஸ்களும் அதனை அமைதியாக பார்த்தபடி நிற்கின்றனர். இது நடப்பது ஏதோ ஒரு அமெரிக்க விமான தளத்தில். வந்திறங்கும் அந்த கார்கோ விமானம் ஆப்கானில் இருந்து வருகிறது.  என்னதான் அந்த பார்சல்களில் இருக்கிறது?  ஆப்கானின் மலிவான மட்டரக

தொடர் மின்வெட்டு: பொன்னேரி மின்வாரிய அதிகாரிகளுக்கு தர்ம அடி !

பொன்னேரி: தமிழக மக்களை வாட்டி வதைக்கும்மின்வெட்டின் உச்சகட்ட விளைவு என்ன என்பதை பொன்னேரிவாசிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொன்னேரி மின்வாரிய அதிகாரிகளை பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர். பொன்னேரில் மின்வெட்டைக் கண்டித்து இன்று காலையில் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது ஆத்திரத்திலும் வெறுப்பிலும் இருந்த பொதுமக்கள் சிலர் அங்குள்ள

கூடங்குளம்: அணுஉலை எதிர்ப்பாளர்கள் கல்லறை தோட்டம் புகும் போராட்டம் !

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி அணுஉலைக்கு எதிரான போராட்டக்குழுவினர் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் இருப்பது மட்டுமின்றி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்ட கடற்கரை கிராமங்களில் மத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டமும், கல்லறையில் புகும் போராட்டமும் நடத்தப்படும் என்று உதயகுமார் அறிவித்தார். அதன்படி அந்த

இறைத்தூதருக்கு அவமதிப்பு: ஈரானில் ஜி மெயிலுக்கு தடை !

டெஹ்ரான்:இறைத்தூதரை அவமதிக்கும் அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து மின்னஞ்சல் சேவை இணையதளமான ஜிமெயிலுக்கு ஈரான் தடை விதித்துள்ளது. ஈரான் செய்தி நிறுவனமான மெஹர் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் ஈரானில் ஜிமெயில் முடக்கப்பட்டது. கூகிளின் வீடியோ பகிர்வு இணையதளமான யூ ட்யூப் இஸ்லாத்தின் இறுதித் தூதரும்,

ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் மிரட்டல்: தேவையற்ற கூக்குரல் – பாரக் ஒபாமா !

வாஷிங்டன்:ஈரானுக்கு எதிராக இஸ்ரேலின் போர் மிரட்டலை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நிராகரித்துவிட்டார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மிரட்டலை தான் தவிர்க்க விரும்பும் தேவையற்ற கூக்குரலாகவே கருதுகிறேன் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். சி.பி.எஸ் தொலைக்காட்சி சானலுக்கு அளித்த பேட்டியில் ஒபாமா இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் தேசிய

நாங்கள் ஆஸ்கரை புறக்கணிக்கிறோம், நீங்களும் செய்யுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு ஈரான் கோரிக்கை !

டெஹ்ரான்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டித்து ஆஸ்கரை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால் இது குறித்து ஈரானிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என்று ஆஸ்கர் விருது விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தைக் கண்டித்து உலக

'ஏசி', அயர்ன் பாக்ஸ், ஹீட்டர் யூஸ் பண்ணாதீங்க...மின்வாரியத்தின் மற்றும் ஒரு பலே யோசனை !

சென்னை: மின்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான வழி வகை தெரியாததால், அதுகுறித்து யோசிக்க முன்வராமல், கரண்ட்டை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகள், அட்வைஸ்களை நாள் தோறும் மின்வாரியம் மக்களுக்குத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளது. விளக்குகளை பயன்படுத்துவதை குறைக்குமாறு முதலில் கூறிய அதிகாரிகள் தற்போது

அண்ணா பல்கலை. தேர்வுத் தாள் முறைகேட்டுக்கு முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர்தான் காரணம்: பேராசிரியர் !

சென்னை: தேர்வுத் தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு செய்த வழக்கில் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் விசாரிக்கப்பட இருக்கிறார். அவரை விசாரிக்க உயர்நிலைக் குழு அமைப்பது பற்றி அரசு முடிவு செய்யும் என்று அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்(பொறுப்பு) காளிராஜ் கூறியுள்ளார். அண்ணா பல்கலை கழகத்தில் 2009 முதல் 2012 வரையிலான கல்வி ஆண்டுகளில் தேர்வுகளில்

மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் போராட்டம். மம்தாவின் அறிவிப்பால் காங்கிரஸ் அதிர்ச்சி !

மத்திய அரசைக் கண்டித்து தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அக்டோபர் 1 ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் ஃபேஸ்புக் இணையதளத்தில் தெரிவித்திருப்பதாவது:÷ சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி !

லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார். யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.
ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ்

முஸ்லிம்கள் போராட்டம் எதிரொலி - கொழும்பு அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டது !

நபிகள் நாயகம் பற்றி அவதூறாகவும் வக்கிரமாகவும் யுட்யூபில் வெளியிடப்பட்ட படத்தைக் கண்டித்து உலகெங்கும் உள்ள முஸ்லீம்கள் போராடி வருகின்றனர். பல உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதுவராலயங்கள் தாக்கப்பட்டன. மேலும் பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களுக்கு முன்பாக முஸ்லீம்கள் போராட்டங்களை நடத்தி  வருகின்றனர். அதுபோல இலங்கையில் உள்ள முஸ்லீம்களும் கடந்த வெள்ளிக்கிழமை தமது எதிர்ப்பைக் காண்பித்திருந்தனர். மேலும் இன்று திங்கட்கிழமை காலையும் கொழும்புவில் ஒரு பெரும் போராட்டம் வெடித்துள்ளது. கிழக்கு மாகான

திங்கள், செப்டம்பர் 24, 2012

இரு மடங்கு உயர்கிறது சர்க்கரை விலை.... டாக்டர் மன்மோகன் சிங்கின் அடுத்த ஆப்பு ரெடி !

டெல்லி: நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் விற்கப்படுகின்றன சர்க்கரை விலை இருமடங்கு அதிகரிக்க உள்ளது. இதுவரை ரேஷன் சர்க்கரைக்கு வழங்கி வந்த மானியத்தை மத்திய அரசு நிறுத்திவிட முடிவு செய்கிறதுடெல்லியில் இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரேசன் சர்க்கரைக்கான மானியத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்படுகிறது. இதனால்