வியாழன், பிப்ரவரி 27, 2014

பாராளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பு பற்றி புகார்: தேர்தல் கமிஷன் நடவடிக்கை


பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், பணம் பெற்றுக்கொண்டு தேர்தல் கருத்துக்கணிப்புகளில் குறிப்பிட்ட கட்சிகளுக்கு சாதகமாக சில நிறுவனங்கள் செயல்படுவதாக 'ஸ்டிங் ஆபரேஷன்' என்னும் ரகசிய நடவடிக்கை மூலம் இந்தி செய்தி சேனல் ஒன்று அம்பலப்படுத்தியது. 

புதன், பிப்ரவரி 26, 2014

விஜயகாந்த் பேச்சைக் கேட்டு குடிகாரர்களே மயங்கி விட்டார்கள்.. நாஞ்சில் சம்பத்..

குடிப்பதில் என்ன தப்பு என்று விஜயகாந்த் பேசுவதைக் கேட்டு குடிகாரர்களே மயங்கிக் கிடக்கிறார்கள். இவருக்கு சரித்திரமும் தெரியாது, பூகோளமும் தெரியாது.. இதில் கோலாலம்மபூர் போய் என்ன செய்யப் போகிறார் என்று கேட்டுள்ளார் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத். 

போலியான கருத்துக் கணிப்புகளை உடைத்த 'ஸ்டிங் அட்டாக்' !


டெல்லியைச் சேர்ந்த நியூஸ் எக்ஸ்பிரஸ் இந்தி டிவி நிறுவனம் நடத்திய "ஸ்டிங் ஆபரேஷன்" எதிரொலியாக தற்போது டைம்ஸ் நவ் டிவியும் தனது கருத்துக் கணிப்புகளை நிறுத்துவதாக தகவல்கள் கூறுகின்றன. நியூஸ் எக்ஸ்பிரஸ் டிவி கருத்துக் கணிப்புகளை எந்த அளவுக்கு போலியானதாக, மோசடியாக செய்கிறார்கள் என்பதை ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது. 

முஸ்லிம்களிடம் மோடி தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் ஆவேசம்


பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், எப்போதாவது தவறு நடந்திருந்தால் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார்.

வங்கதேசத்துடன் இன்று மோதல் வெற்றி பாதைக்கு திரும்புமா இந்தியா?


ஆசிய கோப்பை தொடரின் லீக் போட்டியில் இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆண்டில் ஒரு வெற்றியை கூட ருசிக்காத இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 

நாங்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா?''இறந்துபோன தமிழர்களின் குடும்பங்களுக்காகக் குரல் கொடுத்தார்களா?

 



ஸ்ரீபெரும்புதூர் பிரசாரத்தின்போது ராஜீவ் அருகில் இருந்த காங்கிரஸ் பிரமுகர் லீக் முனுசாமி, எஸ்.பி-யான முகமது இக்பால், டெல்லியில் இருந்து பாதுகாப்புக்காக வந்த குப்தா, இன்ஸ்பெக்டர் ராஜகுரு, இன்ஸ்பெக்டர் எட்வர்டு ஜோசப், சப் இன்ஸ்பெக்டர் எத்திராஜூ, கான்ஸ்டபிள் முருகன், கான்ஸ்டபிள் தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களான லதா கண்ணன், (அவருடைய மகள்) கோகில வாணி, சந்தானி பேகம், சரோஜா தேவி, டேனியல் பீட்டர் ஆகியோர் அந்தச் சம்பவத்தில் இறந்தனர்.

பிலிப்பைன்ஸ்க்கு வரகூடாது : ஒபாமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏப்ரல் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா செல்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடக்கிறது. தலைநகர் மணிலாவில் ஆயிரக்காணோர் திரண்டு அமெரிக்க தளங்கள் பிலிப்பைன்ஸ்க்கு வரகூடாது என்று ஆர்ப்பாட்டம் நத்தினர். பின்னர் அவர்கள் மணிலாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். 

பெண் என்ஜினீயர் கொலையில் மேற்குவங்காள வாலிபர்கள் கைது


சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி ஓய்வுப்பெற்ற ஓவிய ஆசிரியர். அவரது மகள் உமாமகேஸ்வரி (வயது 23). இவர், கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட்டில் உள்ள டி.சி.எஸ். கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்தார். 

பாதுகாப்பு குறைபாடு காரணங்களுக்காக அழிக்கப்படும் சீனாவின் விளையாட்டுப் பொருட்கள்

சீனாவில் உள்ள விளையாட்டு பொம்மைகள் தயாரிக்கும் 9 நிறுவனங்கள் தாங்கள் தயாரித்த பொருட்களில் சிலவற்றை தர நிர்ணய அமைப்புகளின் உத்தரவையடுத்து பாதுகாப்பு குறைபாடு காரணங்களுக்காக திரும்ப பெற்றுள்ளது. 

ஜேம்ஸ் பாண்ட்' கைத்துப்பாக்கி, கைக்கெடிகாரம் ஏலம்

துப்பறியும் சாகச கதை அம்சம் கொண்ட 'ஜேம்ஸ் பாண்ட்' சினிமாப்படங்கள் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. இந்த படங்களில் வரும் கதாநாயகன் புதுமையான கார்கள், கைத்துப்பாக்கி, கைக்கெடிகாரம் போன்றவற்றை பயன்படுத்தி அசத்துவார்கள். 

துபாய் ஓபன் டென்னிஸ்: சோம்தேவ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்


ஆண்களுக்கான டியூட்டி பிரீ சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் முதலாவது சுற்றில் 78-ம் நிலை வீரர் இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தினார். 

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வீழ்ந்தது பாகிஸ்தான்


ஐந்து நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இருமுறை மோதவேண்டும். லீக் சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

செவ்வாய், பிப்ரவரி 25, 2014

ஆசிய கோப்பை முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ரன் குவிப்பு

ஆசிய கோப்பை முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 296 /6

,

உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் வகுப்பு கலவரம்


உத்தரப்பிரதேசத்தில் உள்ள அசம்கர்க் நகரின் முகமதாபூர் பகுதியில் மத வழிபாட்டு தளத்தில் நடைமேடை கட்டுவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

நாங்கள் தவறு செய்திருந்தால் தலைகுனிந்து மன்னிப்பு கோருவோம்: ராஜ்நாத்சிங் ?


நாங்கள் தவறு செய்திருந்தால் தலைகுனிந்து மன்னிப்பு கோருவோம் என்று 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை முன்வைத்து பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.    

சிகப்பணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் சிகப்பு லிச்சி பழம்...


சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிறந்த விதத்தில் செயல்படுகிறது லிச்சி பழம்.  

சன் குரூப்பின் 'சூப்பர் ஆஃபர்'.. ஸ்பைஸ்ஜெட் விமானக் கட்டணத்தை 75% குறைத்தது!



சன் குழுமத்தின் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் கோடை காலத்தை முன்னிட்டு தனது விமான பயணக் கட்டணத்தை வெகுவாக குறைத்துள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சாம்சங்கின் கேலக்ஸி S5 !


உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த சாம்சங்கின் கேலக்ஸி S5 யை சாம்சங் நேற்று ஸ்பெயினில் வெளியிட்டது. ஏப்ரல் மாதத்தில் இருந்து இது அனைத்து ஸ்டோர்களிலும் கிடைக்கும் என்றும் நேற்று சாம்சங் அறிவித்துள்ளது. இதில் இதன் திரை 5.25 அங்குல அளவில் Super AMOLED டிஸ்பிளேயுடன் இருக்கும்.

தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்திய போலீஸ் !


தமிழகத்திலேயே முதல் முறையாக குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்திய போலீஸ்                             தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு குற்ற வழக்கில் ஆளில்லாத விமானத்தை பயன்படுத்தியுள்ளது   காவல்துறை.                                          

ஆசிய கோப்பை கிரிக்கெட்: விளையாடாத முன்னணி வீரர்கள்

ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி கேப்டன் டோனி மட்டுமல்லாமல் வேறு முன்னணி வீரர்களும் காயத்தால் ஆடவில்லை.

பாராளுமன்ற தேர்தல்:12 கட்சிகள் தலைவர்கள் இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை


பாராளுமன்ற தேர்தல் இன்னும் 2 மாதத்தில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்பட இருக்கும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. 

பெண் என்ஜினீயரை கொன்ற கொலையாளி அடையாளம் தெரிந்தது: எஸ்.எம்.எஸ். காட்டி கொடுத்தது

சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையிலான சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், புதர்களுக்கு நடுவில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்தன. இவற்றை சேகரித்து தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

பேப்பர் சோதனை மூலம் கேன்சரை எளிதில் கண்டறியலாம்: இந்திய வம்சாவளி விஞ்ஞானி சாதனை


வளரும் நாடுகளில் கேன்சர் நோயின் சதவிகிதம் தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல் உலகளாவிய கேன்சர் நோயாளிகளின் இறப்பும் 70 சதவிகிதமாக அதிகரித்துள்ளது இந்நோயின் பெரும் தாக்கத்தையே குறிப்பதாக உள்ளது. 

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆயுள் சிறை: உகாண்டாவில் புதிய சட்டம்


கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவிலும் ஓரினச் சேர்க்கையாளர்கள் சேர்ந்து வாழ்வதும், திருமணம் செய்து கொள்வதும் கொடும் குற்றமாக கருதப்படுகிறது.

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி: கூடங்குளம் போராட்டக்குழு தேர்தலில் போட்டி


கூடங்குளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் தொடர் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்திற்கு சொந்தக்காரர் ஸைனுல் ஆபிதீன் ஹஸன்!

இதுவரை எல்லோரும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற துடிப்பான முழக்கத்திற்கு சொந்தக்காரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என நம்பியிருந்தார்கள்.ஆனால், நரேந்திர லூதர் எழுதிய ‘LEGENDOTES OF HYDERABAD’ என்ற நூலில் இன்னொரு வரலாறு கூறப்பட்டுள்ளது.

அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி : அம்மா வைத்த ஆப்பு

லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற இலக்குடன், தே.மு.தி.க.,வில் இருந்து, அ.தி.மு.க., பக்கம் தாவிய, அக்கட்சியின் அதிருப்தி, எம்.எல்.ஏ., பாண்டியராஜனுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதேபோல், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் மற்ற ஆறு பேரும், அதிருப்தி அடைந்துள்ளனர்.

நிராகரித்து விட்டார்:
விருதுநகர் தொகுதி, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் பாண்டிய ராஜன். இவர், தே.மு.தி.க., சார்பில், விருதுநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, விஜயகாந்தி டம், 'சீட்' கேட்டார். ஆனால், கட்சியில் ஒருவருக்கு, ஒரு பதவிதான் வழங்கப்படும் எனக் கூறி, அவரின் கோரிக்கையை, விஜய காந்த் நிராகரித்து விட்டார். இதையடுத்து, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், ஏழாவது ஆளாக முதல்வரை சந்தித்து, அ.தி.மு.க., ஆதரவாளராக மாறினார், பாண்டியராஜன். அதுமட்டுமின்றி, தன் காரிலும், அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தினார். அ.தி.மு.க., கரைவேட்டி அணிந்து, பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட, தனக்கு நிச்சயம், அ.தி.மு.க.,வில், சீட் கிடைக்கும் என, எதிர்பார்த்தார். சீட் கொடுக்கப்பட்டால், தற்போதைய, எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்யவும், தயாராக இருந்தார். அதனால், விருதுநகர் தொகுதியில், மகளிர் குழுக்களை உருவாக்கி, நிதி உதவி அளித்து வந்தார். தன், திருமண நாளை ஒட்டி, சமீபத்தில், முதல்வர் ஜெயலலிதாவை, தன் மனைவியுடன் சந்தித்து வாழ்த்தும் பெற்றார். அப்போது, அ.தி.மு.க., உறுப்பினராக்கும்படி கேட்டு, கடிதம் ஒன்றையும், முதல்வரிடம், பாண்டியராஜன் வழங்கினார்.

தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் ஷிண்டே ஆவேசம்


புனே:காங்கிரசுக்கு எதிராக தவறாக பிரசாரம் செய்யும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என பேசி மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே அச்சுறுத்தியுள்ளார்.இது குறித்து தனது சொந்த ஊரான மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் நடந்த ஒரு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிண்டே பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:சமீபத்தில் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களில் காங்கிரசுக்கு எதிராக பொய்யான பிரசாரங்களை பரப்பிவரும் மின்னணு ஊடங்களை நசுக்க வேண்டும் என்றார்
. எனது துறை கட்டுப்பாட்டின் கீழ் புலனாய்துறை உள்ளது. இது போன்ற விஷயங்களை யார் செய்கிறார்கள் என்று எனக்கு நன்றாக தெரியும் என்றார்.லோக்சபா தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள், தனியார் ஏஜென்சிகள் மூலம் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. இது பா.ஜ.,வுக்கு சாதகமான கணக்குகளை சொல்லிவருகின்றன.

உலக டென்னிஸ் தர வரிசை: 78-வது இடத்தில் சோம்தேவ்

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முதலிடத்திலும், செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 3-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 4-வது இடத்திலும், அர்ஜென்டினா வீரர் டெல்போர்டோ 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர். 

டெல்லி ஓபன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் 18 இடங்கள் முன்னேறி 78-வது இடம் பிடித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சோம்தேவ் 62-வது இடத்தை பிடித்ததே அவரது சிறந்த தர வரிசையாகும். டெல்லி ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 3 இடங்கள் பின்தங்கி 146-வது இடம் பெற்றுள்ளார். 

மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் மன்னன் கைது

 
மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜோவாக்கின் எல் சாப்போ கஸ்மேன் லோயெரா.  இவனுக்கு வயது 56.  அமெரிக்காவுக்கு போதை பொருள் விநியோகம் செய்வதில் இவன் பெரும் பங்கு வகித்து வந்தான்.  கஸ்மேன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.30 கோடி பரிசு தொகை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்து இருந்தது.

சுரங்க பாதை வீடுகள் 

அவனை கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் அவன் மெக்சிகோவில் பசிபிக் கடற்கரை நகரமான மஷட்லானில் கைது செய்யப்பட்டான். அங்குள்ள ஓர் ஓட்டலில் பதுங்கியிருந்த அவனை போலீசார் கைது செய்தனர்.  அதன் பின்பு போலீசார் நடத்திய சோதனையில், கஸ்மேனுக்கு 46 சொகுசு கார்கள், 16 வீடுகள் மற்றும் 4 பண்ணை வீடுகள் இருந்துள்ளன.
அவனுக்கு சொந்தமான வீடுகளில் 7 வீடுகள் சுரங்க பாதை கொண்டதாக அமைந்துள்ளது.  இதனால், போலீசார் அவனை கைது செய்ய முற்படும்போது தப்பித்து செல்வதற்கு வசதியாக இந்த சுரங்க பாதை இருந்துள்ளது.  இந்த சொத்துக்களை தவிர்த்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
அமெரிக்கா கோரிக்கை
அவற்றில் பெரிய வகை ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவையும் அடங்கும்.  அமெரிக்காவிற்கு 25 சதவீத போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் கஸ்மேனுக்கு தொடர்பு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போது, இவனை நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

திங்கள், பிப்ரவரி 24, 2014

ஸ்ரீலங்கா பள்ளிவாசல்களுக்கு காத்திருக்கும் ஆபத்து........


மார்­கழி மாதக் குளிரில் எம் மத்­தியில் மீண்டும் சூடு பிடித்­துள்ள செய்தி பள்­ளி­வா­சல்கள் உடைக்­கப்­ப­டு­கின்­றன, முஸ்­லிம்­களின் இருப்­புக்கு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றது என்பதாகும். தம்­புள்­ளையில் ஆரம்­பித்து தற்­போது வரை சுமார் 30 பள்­ளி­வா­சல்கள் சிங்­க­ள-­ பௌத்த இன­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு இரை­யா­கி­யுள்­ளன.

ஆப்கானிஸ்தானில் இந்திய மருத்துவர்... !


தாலிபான்களின் செல்வாக்கு மிகுந்த காந்தஹார் பகுதியில்
பணியாற்றுவது மகிழ்ச்சியே என்று இந்திய டாக்டர் ஷா நவாஸ்
தெரிவித்துள்ளார்.45 வயதான ஷா நவாஸ் இங்குள்ள ஒரு தனியார்
மருத்துவமனையில் சேவை புரிந்து வருகிறார்.

ஒரு ரூபாய்க்கு காசோலை! இந்தியாவின் நிலை?...

ஹரியானாவின் மேவாத்தில் சூறாவளியின் காரணமாக விவசாய பயிர்கள் அழிந்ததால் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடாக வழங்கிய காசோலையின் மதிப்பை கேட்டால் அனைவரும் ஆச்சரியம் அடைவார்கள்.பலருக்கும் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய்க்கான காசோலைகள்வழங்கப்பட்டுள்ளன.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதல்லாம்.....? பயம்!...அரபு எழுத்து ஏற்படுத்திய அச்சம்


க பயணி ஒருவர் அரபு மொழியில் எழுதியதைக் கண்ட அருகில் அமர்ந்திருந்த மாணவர்கள் அச்சமடைந்து புகார் அளித்ததை தொடர்ந்து பிரிட்டீஷ் விமானம் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதப்படுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது.

ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்! கிடுக்குபிடியில் சி.ஐ.ஏ!

:

யெமனில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ நடத்தி வரும் ஆளில்லா விமானத்தாக்குதல்களின்(ட்ரோன்) சட்ட அந்தஸ்து குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கேள்வி எழுப்பியுள்ளது. 

கடந்த டிசம்பரில் மத்திய யெமனில் ரதாஃ மாகாணத்தில் சி.ஐ.ஏ நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் திருமணக் குழுவைச் சார்ந்தவர்கள் என்றும் போராளிகள் அல்லர் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குஜராத் இனக்கலவரத்துக்கு காரணமானவர் நரேந்திர மோடி: சரத்பவார் கடும் தாக்கு!


குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் ஏராளமான முஸ்லிம்கள் இறந்தனர். இதில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், நரேந்திர மோடியை கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.

மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் – கேபர் ஓனா!


துருக்கி நாட்டில் பிரயாணம் செய்த ஹங்கேரியிலுள்ள ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதி கேபர் வோனா, “மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே” என இஸ்லாத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

சனி, பிப்ரவரி 22, 2014

பாரதீய ஜனதா ( டீக்கடை) காங்கிரஸ்( பால்பூத்) கம்யூனிஸ்ட் ....?


                                         

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆரம்ப காலத்தில் டீக்கடை நடத்தியவர் என்பதால் அவரை காங்கிரசார் டீக் கடைக்காரர் என்று ஏளனம் செய்தனர். அதையே பாரதீய ஜனதா கையில் எடுத்துக்கொண்டு நரேந்திரமோடி பெயரில் டீக்கடைகள் திறந்தது.

தமிழ்நாட்டில் தொடரும் வெடிகுண்டு கலாச்சாரம் ... இதன் பின்னணி என்ன ?


செஞ்சியை அடுத்த நரசிங்கராயன்பேட்டை அருகே விழுப்புரம் மாவட்ட ‘கியூ’ பிரிவு போலீசார் இன்று வாகன சோதனை நடத்தினர். செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு மினிவேனை போலீசார் வழிமறித்து நிறுத்து சோதனையிட்டனர்.

வியாழன், பிப்ரவரி 20, 2014

இராமநாதபுரம் PFI ஊர்வலத்தில் தடியடி- உண்மை அறியும் குழு அறிக்கை:-


“பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா” அமைப்பினர் ஆண்டுதோறும், அவ் அமைப்பு தொடங்கப்பட்ட பிப்ரவரி 17 அன்று நாடெங்கிலும் ‘ஒற்றுமைப் பேரணி’ (யூனிடி மார்ச்) மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்ததிவருகின்றனர். சீருடை அணிந்த அவ்வமைப்பின் இளைஞர்களும், அமைப்பின் பிற ஆதரவாளர்களும் தேச ஒற்றுமை சார்ந்த முழக்கங்களை இட்டுக்கொண்டு ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடத்துவது வழக்கம். 

புதன், பிப்ரவரி 19, 2014

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு: தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது மத்திய அரசு...


இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்க கோரி மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்த இட ஒதுக்கீடானது 4.5 சதவீதமாகும்.

 அதாவது, கல்வி, வேலைவாய்ப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து இந்த ஒதுக்கீடு திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. 

நாடாளமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 42 இடங்களில் போட்டி!


நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ  கட்சி, ஒன்பது மாநிலங்களில் மொத்தம் 42 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஃப்ஸர் பாஷா கூறும் போது, "கேரளாவில் 20, தமிழகம் மற்றும் மேற்கு வங்களாத்தில் 5, கர்நாடகாவில் 4,  ஆந்திர பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் 2,  மத்தியபிரதேசத்தில்  மற்றும் டெல்லியில் 1 என 42 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்" என்று தெரிவித்தார்.

காவல்துறையின் கொலைவெறி தாக்குதலை கண்டித்து சென்னையில் PFI மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் 17/2/2014 அன்று இராமநாதபுரத்தில் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் தின பேரணியில் பொதுமக்கள் மீது காவல்துறையின் கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று 18/2/2014 மாலை 4.30 மணியளவில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பில், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

டெல்லி: முதல்வருக்கும் கவர்னருக்கும் மோதல்..


டெல்லியில் கவர்னர் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கெஜ்ரிவாலின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி அரசு அமைத்தது. சட்டசபையில் கடந்த 14–ந் தேதி, முதல்–மந்திரி முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து மட்டத்திலும் ஊழல் புரிவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் ஜனலோக்பால் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சித்தார். இது தோல்வியில் முடிந்தது.

ஞாயிறு, பிப்ரவரி 09, 2014

இத்தாலி கொலையாளிகளுக்கு கருணை காட்டும் மத்திய (சோனியா) அரசு...

கொச்சியில் மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான இத்தாலிய கப்பல் பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டாம் என்ற மத்திய அரசின் முடிவு கேரளா மீனவ சமுதாயத்தில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் கேரளா கடற்பரப்பில் 2 இந்திய மீனவர்களை சுட்டுகொன்ற வழக்கில் கைதான இத்தாலி கப்பல் பாதுகாப்பு வீரர்கள் இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையில் ஜாமீனில் உள்ளனர்.