கொச்சியில் மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான இத்தாலிய கப்பல்
பாதுகாப்பு படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டாம் என்ற மத்திய
அரசின் முடிவு கேரளா மீனவ சமுதாயத்தில் மிகுந்த கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் கேரளா கடற்பரப்பில் 2 இந்திய
மீனவர்களை சுட்டுகொன்ற வழக்கில் கைதான இத்தாலி கப்பல் பாதுகாப்பு வீரர்கள்
இருவரும் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையில் ஜாமீனில்
உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் திடீர்
திருப்பமாக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்க தேவையில்லை என உள்துறை
அமைச்சகம் கூறியுள்ளது.
மரண தண்டனை விதிக்கும் பிரிவுகளை த்தவிர்த்து சட்ட விரோத அடக்குமுறை சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தலாம் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் முடிவுக்கு சம்பந்த பட்ட கப்பல் நிறுவனமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மீனவர் கொலையை தீவிரவாத செயலாகக் கருத வேண்டும் என்று அதன் வழகறிஞர் மேத்திவ் கொச்சியில் கூறினார். இந்த வழக்கில் இந்திய அரசு குழப்பமான விசாரணை நடத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
சொந்த
நாட்டு மக்களுக்கு, எவ்வித ஆதாரமும் இல்லாமல், கூட்டுமனசாட்சியை திருப்தி
படுத்த தூக்கு தண்டனை வழங்கும் மத்திய அரசு, கேரளா மீனவர்களை கொலை செய்த
இத்தாலி கொலையாளிகளுக்கு கருணை காட்டுவது ஏன்? நம் நாட்டை ஆட்சி செய்வது
யார் இந்திய அரசாங்கமா அல்லது இத்தாலி அரசாங்கமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக