புதன், பிப்ரவரி 19, 2014

நாடாளமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ 42 இடங்களில் போட்டி!


நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ  கட்சி, ஒன்பது மாநிலங்களில் மொத்தம் 42 இடங்களில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஃப்ஸர் பாஷா கூறும் போது, "கேரளாவில் 20, தமிழகம் மற்றும் மேற்கு வங்களாத்தில் 5, கர்நாடகாவில் 4,  ஆந்திர பிரதேசம், உத்திரப் பிரதேசம் மற்றும் பீகாரில் 2,  மத்தியபிரதேசத்தில்  மற்றும் டெல்லியில் 1 என 42 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்" என்று தெரிவித்தார்.
கேரளாவில் 20 தொகுதிகளிலும், தமிழகத்தில் பொள்ளாச்சி, வட சென்னை, ராமநாதபுரம், வேலூர் மற்றும் நெல்லை தொகுதிகள், கர்நாடகாவில் மங்களூர், பெங்களூர், உடுப்பி-சிக்மகளூர், மைசூர் தொகுதிகள், மேற்குவங்காளத்தில் ஜங்கிபூர், முர்ஷிதாபாத், பெர்காம்பூர், டைமண்ட் ஹார்பர், மால்டா சவுத் தொகுதிகள், ஆந்திராவில் குர்னூல், நெல்லூர், பீகாரில் கத்திஹார், பூர்ணியா, உ.பியில் மஹாராஜ் கஞ்ச், கைரன் தொகுதிகள், மத்தியபிரதேச மாநிலத்தில் போபால் மற்றும் டெல்லியின் வடகிழக்கு ஆகிய தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ  கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பின் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக