:
யெமனில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ நடத்தி வரும் ஆளில்லா விமானத்தாக்குதல்களின்(ட்ரோன்) சட்ட அந்தஸ்து குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த டிசம்பரில் மத்திய யெமனில் ரதாஃ மாகாணத்தில் சி.ஐ.ஏ நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் திருமணக் குழுவைச் சார்ந்தவர்கள் என்றும் போராளிகள் அல்லர் என்றும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் நேற்று முன் தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரதாஃவில் திருமணக் குழுவினர் சென்ற ஓடும் வாகனத்தின் மீது அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் காயமடைந்தனர். இத்தகைய தாக்குதல்கள் தொடருவது கடுமையான கவலையை அளிக்கிறது.
தாக்குதலுக்கு இலக்கான வாகனம் திருமணக் குழுவினர் சென்றது. அக்குழுவில் அல்காயிதா இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பயணித்தார்களா? என்பது தெளிவில்லை.
அவ்வாறு இருந்தாலும் அவர்கள் யார்? தற்போது உயிரோடு இருக்கின்றார்களா? என்பது குறித்து அமெரிக்கா விளக்கம் அளிக்கவில்லை என்று 28 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக