பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், எப்போதாவது தவறு நடந்திருந்தால் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினார்.
பாரதீய ஜனதா கட்சி முஸ்லிம்களுக்கு விரோதமான கட்சி அல்ல என்று கூறிய ராஜ்நாத்சிங் பா.ஜ.க. ஒரு முறை நாட்டை ஆள, முஸ்லிம்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரஷித் ஆல்லி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்துக்கு ராஜ்நாத்சிங் மன்னிப்பு கேட்பதை ஏற்க முடியாது. அவர் எந்த தவறும் செய்ய வில்லை. பிறகு அவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?
குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு முதல்–மந்திரி பதவியில் இருந்த நரேந்திர மோடிதான் பொறுப்பு ஏற்க வேண்டும். எனவே முஸ்லிம்களிடம் நரேந்திர மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும். மோடி மன்னிப்பு கேட்காமல் வேறு யாரும் இதற்கு மன்னிப்பு கேட்க முடியாது.
இவ்வாறு ரஷீத் ஆல்லி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக