குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் ஏராளமான முஸ்லிம்கள் இறந்தனர். இதில் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், நரேந்திர மோடியை கோர்ட்டு விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய மந்திரி சரத்பவார் நேற்று மும்பையில் நடந்த சிறுபான்மையினர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நரேந்திர மோடி பற்றி கூறியதாவது:
அண்டை மாநிலத்தின் முதல்-மந்திரி (நரேந்திர மோடி) தனது ஆட்சியில் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் பற்றி சொற்பொழிவு ஆற்றுகிறார். முன்னேற்றம் என்பது என்ன? ஏழை மக்களின் உயிரை பறிப்பதா? அல்லது அவர்களின் முகத்தில் மலர்ச்சியை ஏற்படுத்துவதா?
நாட்டின் எதிர்காலத்தை மாற்ற போவதாக அவர்கள் பேசுகிறார்கள். ஆனால் குஜராத் கலவரத்தில் பெரிய அளவில் நடந்த கொலையை ஒட்டுமொத்த நாடே பார்த்தது. (இதன் மூலம் குஜராத் இன கலவரத்துக்கு நரேந்திர மோடி காரணம் என்று அவரது பெயரை தெரிவிக்காமல் குற்றம் சாட்டினார்).
இவர்கள் தற்போது தேர்தலில் முழு அதிகாரத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்கிறார்கள். ஆனால் குறிப்பிட்ட சமுதாய மக்களை புறக்கணிப்பது அவர்களது கொள்கையாக உள்ளது.
இவ்வாறு சரத்பவார் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக