செவ்வாய், பிப்ரவரி 25, 2014

நாங்கள் தவறு செய்திருந்தால் தலைகுனிந்து மன்னிப்பு கோருவோம்: ராஜ்நாத்சிங் ?


நாங்கள் தவறு செய்திருந்தால் தலைகுனிந்து மன்னிப்பு கோருவோம் என்று 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை முன்வைத்து பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.    

மோடியின் 272 + முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் டெல்லியில் இன்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய ராஜ்நாத்சிங், நாங்கள் கடந்த காலங்களில் ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக நிச்சயம் நாங்கள் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்போம். 
 
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. நாட்டை கட்டியெழுப்பவே நாங்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறோம். நாடு பிளவுபடுவதை ஏற்றுக்கொள்பவர்கள்தான் உண்மையான மதவாதிகளே தவிர நாங்கள் அல்ல என்றார். 
 
லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் இஸ்லாமியர்கள் வாக்குகள் கணிசமாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பக்கமே செல்வதாக கருத்து கணிப்புகள் கூறும் நிலையில் ராஜ்நாத்சிங் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
அனேகமாக விரைவில் 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்துகாக பாரதிய ஜனதா கட்சி மன்னிப்பு கோரக் கூடக் கூடும் என்றே தெரிகிறது. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக