திங்கள், பிப்ரவரி 24, 2014

ஸ்ரீலங்கா பள்ளிவாசல்களுக்கு காத்திருக்கும் ஆபத்து........


மார்­கழி மாதக் குளிரில் எம் மத்­தியில் மீண்டும் சூடு பிடித்­துள்ள செய்தி பள்­ளி­வா­சல்கள் உடைக்­கப்­ப­டு­கின்­றன, முஸ்­லிம்­களின் இருப்­புக்கு அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றது என்பதாகும். தம்­புள்­ளையில் ஆரம்­பித்து தற்­போது வரை சுமார் 30 பள்­ளி­வா­சல்கள் சிங்­க­ள-­ பௌத்த இன­வா­தி­களின் தாக்­கு­தல்­க­ளுக்கு இரை­யா­கி­யுள்­ளன.
அண்­மையில் தெகி­வளை பிர­தே­சத்தில் அமைந்துள்ள மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழுகை மற்றும் இதர மார்க்க நட­வ­டிக்­கை­களை நிறுத்திக் கொள்­ளு­மாறு பொலி­சாரின் கட்­டளை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அப்­பள்­ளி­வா­சல்­களின் நிரு­வா­கத்­தினர் அதற்கு ஒரு­போதும் செவி சாய்க்­க­வில்லை. இதன் கார­ண­மாக இம்­மாதம் 15ம் திக­தி­யன்று நிரு­வா­கத்­தி­னரை அழைத்த கொஹுவெல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பள்­ளி­வா­சலில் தொழுகை நட­வ­டிக்­கை­களை உட­ன­டி­யாக நிறுத்­து­மாறும், அவ்­வாறு நிறுத்­தாத பட்­சத்தில் ஏற்­படும் விளை­வு­க­ளுக்கு நாம் பொறுப்­பல்ல எனவும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்தார்.
பள்­ளி­வா­சல்­களில் சிங்­க­ள-­ பௌத்த இன­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­ கின்ற இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு எல் லாம் பின்­பு­ல­மாக காணப்­ப­டு­வது 2008 ஆம் ஆண்டில் புத்த சாசன திணைக்­க­ளத்­தினால் (அமைச்­சினால்) வெளி­யி­டப்­பட்­டுள்ள சுற்று நிரு­ப­மாகும். அதன் ஏற்­பா­டு­களின் பிர­காரம் 2008.10.16 திக­திக்கு பின்பு பதிவு செய்­யப்­பட்டு இயங்­கு­கின்ற நாடு பூரா­கவும் உள்ள சுமார் 389 பள்­ளி­வா­சல்கள் இத்­த­கைய அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாகும் நிலைமைகள் காணப்­ப­டு­கின்­றன. 
எனவே, பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ரான சிங்­க­ள-­ பௌத்த இவா­தி­களின் செயற்­பா­டுகள் குறிப்­பிட்ட ஓரிரு பள்­ளி­வா­சல்­க­ளுடன் முற்றுப் பெறக்­கூ­டிய ஒன்­றல்ல. மாறாக, நாடு­ பூ­ரா­கவும் வாழ்­கி­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கும் அவர்­க­ளு­டைய பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் எதி­ரான இன­வாத நட­வ­டிக்­கையின் ஆரம்­பமே இது­வாகும். 
இது­வரை காலமும் தாக்­கு­த­லுக்கு அல்­லது அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு வந்த பள்­ளி­வா­சல்கள் அனைத்­திற்கும் காரணம் இதுவே என்­ப­தனை மக்கள் புரிந்து வைத்­தி­ருக்க வேண்டும். 
சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்­ப­தாக, ராஜ­கி­ரிய ஒபயசேக­ர­பு­ரவில் உள்ள பள்­ளி­வா­ச­லுக்கும் இதே முறை­யி­னையே இந்த சிங்­க­ள -­பௌத்த பேரி­ன­வா­திகள் மேற்­கொண்­டி­ருந்­தனர். அன்றும் புத்­த­சா­சன அமைச்சின் செய­லாளர் பள்­ளி­வா­சலின் நட­வ­டிக்­கை­யினை நிறுத்­து­மாறு பள்­ளி­வா­ச­லுக்கு அனுப்­பிய கடி­தத்தின் பிரதி முஸ்லிம் காலச்­சார பண்­பாட்டு அலு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கும், மற்­றொரு பிரதி பொலி­சா­ருக்கும் அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இதே நிலை­மையே பின்பு கிராண்ட் பாஸ் பள்­ளி­வா­ச­லிலும் நடந்­தே­றி­யது என்­ப­துடன் இன்று தெஹி­வ­ளை­யிலும் பரீட்­சிப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.
புத்­த­சா­சன அமைச்சில் பேச்­சு­வார்த்தை

இம்­மாதம் 18 ஆம் திக­தி­யன்று, குறித்த பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யாளர் சபை உறுப்­பி­னர்கள் கொஹு­வல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யினால் புத்­த­சா­சன அமைச்சில் பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். எனினும் பள்­ளி­வா­சல்­களின் நிரு­வ­கத்­தினர் தொடர்ந்தும் அவ்­வா­றான கூட்­டத்தில் பங்கு­பற்­று­வ­தில்லை எனக் கூறி நிரா­க­ரித்­து­விட்­டனர். 
இந்­ நி­ரா­க­ரிப்பின் பின்­ன­ணியில் பல நியா­யங்கள் இருந்­தன. புத்­த­சா­சன அமைச்சில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கூட்­டத்தில் பங்­கு­பற்­று­வ­தா­னது தமக்கு நாட்டின் சட்­டத்­தினால் வழங்­கப்­பட்­டுள்ள உரி­மை­யினை தாமாகவே நிரா­க­ரித்து கொள்­வதாய் அமையும். பள்­ளி­வா­சல்கள் தொடர்பில் ஏற்­ப­டு­கின்ற பிரச்­சி­னைக்கு புத்­த­சான அமைச்சில் தீர்வு காண்­பது என்­பது புத்­த­சா­சன அமைச்­சி­னையும் அதன் செய­லா­ள­ரி­னையும் பள்­ளி­வா­சல்­களின் நிரு­வாக நட­வ­டிக்­கைகள் குறித்த அலு­வ­லக உயர் அதி­கா­ரி­களாக ஏற்றுக் கொள்­வ­தா­கவும், அவர்­க­ளு­டைய அநீ­தி­யான போக்­கினை நாம் மதிப்­ப­தா­க­வுமே அமையும். மேலும், கடந்த காலங்­களில் அழைப்பை மதித்து அவ்­வா­றான பேச்­சு­வார்த்­தைக்கு சென்ற பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யாளர் சபை­யி­ன­ருக்கு தமது நிலைப்­பாட்­டினை அச்­ச­பையில் எடுத்துக் கூறு­வ­தற்கு எது­வித அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­பது அனு­பவம். அங்கு முஸ்லிம் அமைச்­சர்­களும், ஏனைய முஸ்லிம் சமூக பிர­தி­நி­தி­களும் இரண்டாம் தர­மா­கவே நடாத்­தப்­பட்­டி­ருந்­தனர். 
பேச்­சு­வார்த்­தையில் பங்­கு­பற்­றா­ததன் விளைவு 
குறித்த பள்­ளி­வா­சல்­களின் நிரு­வா­கத்­தினர் கொஹு­வல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தனது அதி­கா­ரத்­தினை துஷ்பி­ர­யோகம் செய்­வ­தா­கவும், எது­வித அடிப்­ப­டையும் இன்றி குறித்த பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­யினை நிறுத்­து­மாறு கூறு­வ­தா­கவும் கருதி கொழும்பு பொலிஸ் தலைமை­ய­கத்தில் உட­ன­டி­யாக அப் ­பொ­றுப்­ப­தி­கா­ரிக்கு எதி­ராக முறைப்­பாடு ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தனர். 
இதன் கார­ண­மாக, அன்­றி­ரவு சுமார் 11.30 மணி­ய­ளவில் கட­வத்தை வீதி­யி­லுள்ள மஸ்­ஜிதுல் ஷாபி பள்­ளி­வா­ச­லுக்கு பேரி­ன­வாத கும்­ப­லினால் சேதம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது குறித்த பள்­ளி­வாசல் நிரு­வ­கத்­தினர் தொலை­பேசி மூலம் பொலி­சா­ருக்கு இது­பற்றி அறி­வித்த போதும் பொலிசார் குறித்த இடத்­திற்கு வருகை தர­வில்லை. பொலிசார் அவற்றை தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்­டி­ருந்­தனர் என்ற செய்­தியும் இல்­லா­ம­லில்லை. இதனால் பாது­காப்பு அமைச்­சுக்கு மேற்­கொண்ட உட­னடி முறைப்­பாட்டின் பேரில் இரா­ணு­வத்­தினர் அவ்­வி­டத்­திற்கு வருகை தந்து நிலைமையை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்டு வந்தனர். பின்னர் பள்­ளி­வா­ச­லுக்கு இரா­ணுவ பாது­காப்பும் அன்­றி­ரவு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
சுற்று நிரு­பத்தின் சூழ்ச்சி 

பள்­ளி­வா­சல்கள் தொடர்பில் புத்­த­சா­சன அமைச்சு தனது பௌத்த கொள்­கைக்கு மாறான நாடகத்தினை அரங்­கேற்ற கார­ண­மா­கவும், ஏற்­க­னவே அது பள்­ளி­வா­சல்கள் மீது அரங்­கேற்­றி­யி­ருக்­கின்ற இன­வாத நாட­கங்­க­ளுக்கும் பின்­பு­ல­மாக காணப்­ப­டு­வதும் அதன் 2008 ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட சுற்று நிரு­ப­மாகும். இச்­சுற்று நிரு­ப­மா­னது நாட்டில் உள்ள விகா­ரைகள், கோவில்கள், தேவா­ல­யங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் என்­ப­வற்றின் எண்­ணிக்­கை­யினை கட்­டுப்­ப­டுத்­தவும், அவற்றை ஒழுங்குபடுத்­தவும் எனக் கூறி புத்­த­சா­சன அமைச்சின் செய­லா­ள­ரினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இச்­சுற்று நிருப ஏற்­பா­டு­களின் கீழ், வணக்­கத்­த­லங்கள் எதுவும் அமைக்­கப்­ப­டு­வ­தாக இருப்பின் அவை குறித்த சமய அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள முன்­ப­தாக, குறித்த வணக்க வழி­பாட்­டிடம் அமைந்­தி­ருக் கும் பிர­தே­சத்தின் உள்­ளூராட்சி அதி­கார சபை­யிடம் இருந்து அனு­ம­தியைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். அவ்­வாறு உள்­ளூராட்சி அதி­கார சபை தான் அனு­மதி வழங்க முன்­ப­தாக குறித்த வணக்க வழி­பாட்­டிடம் அமை­ய­வி­ருக்கும் பிர­தே­சத்­தி­லுள்ள பிர­தேச செய­லக மற்றும் கிராம சேவ­க­ரி­னதும், ஏனைய மதங்­களைச் சேர்ந்த வணக்­க­ஸ்த­லங்கள் அங்கு இருப்பின் அவற்­றி­னு­டைய அனு­ம­தி­யி­னையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என கூறு­கின்­றது. அதா­வது, குறித்த பிர­தே­சத்தில் காணப்­ப­டு­கின்ற ஏனைய மத வழி­பாட்­டி­டங்கள் (குறிப்­பாக விகாரை-, விகா­ரா­தி­பதி) அதற்கு தமது ஆட்­சே­ப­னையை தெரி­விக்­கின்ற போது குறித்த வணக்­கத்­த­லத்­தினை அமைத்துக் கொள்ள முடி­யாது.
சுற்று நிரு­பத்­தினை ஏற்றுக் கொள்ள முயாதது ஏன்?

தற்­போது இந்த சுற்று நிரு­பத்தின் சூழ்ச்சி முஸ்லிம் மக்­களை குறி­வைத்து சுற்றி வந்­தாலும், அதன் தாக்கம் எதிர்­கா­லத்தில் நாட்டில் உள்ள ஏனைய சிறு­பான்­மை­யி­ரையும் மெல்ல இறுக நசுக்கும் என்­பதில் சந்­தேகம் கிடை­யாது. எனவே, இச்­சுற்று நிரு­பத்தின் ஏற்­பா­டு­களின் பிர­காரம் நீங்கள் தற்­போது கோவில், தேவா­லயம் அல்­லது பள்­ளி­வாசல் ஒன்­றினை நிர்­மா­ணிக்க வேண்­டு­மாக இருந்தால் அரு­கி­லுள்ள விகா­ரை­யி­லி­ருந்து அல்­லது பிற வணக்­கஸ்­த­லங்­களில் இருந்து உங்கள் வணக்­கஸ்­த­லத்­திற்கு எதி­ராக எது­வித ஆட்­சே­ப­னையும் தெரி­விக்­கப்­படக் கூடாது. சுருங்கக் கூறு­வ­தானால், நீங்கள் உங்­க­ளுக்­கென வணக்­கஸ்­தலம் ஒன்­றினை நிர்மா­ணிப்­ப­தாக இருந்தால் அதனை தீர்­மா­னிக்க வேண்­டி­யது நீங்கள் அல்ல மாறாக உங்கள் பிர­தே­சத்தில் அமைந்­தி­ருக்கும் விகா­ரையும் அதன் தலைமைப் பிக்குவும்தான்.
மேலும், இச்­சுற்று நிருபம் வெளி­யி­டப்­பட்­டதன் பின்னர் சுமார் 389 பள்­ளி­வா­சல்கள் நாடு பூரா­கவும் வக்பு சபையின் கீழ் பதி­யப்­பட்­டுள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எனவே, தற்­போது தெகி­வளை பிர­தே­சத்தில் உள்ள இப்­பள்­ளி­வா­சல்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள பிரச்­சினை என்­பது நிச்­ச­ய­மாக தெகி­வ­ளையை சுற்றி வாழும் முஸ்­லிம்­களின் பிரச்­சினை மட்­டு­மல்ல. எதிர்­கா­லத்தில் நாட்டில் உள்ள ஏனைய பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் இதே பரி­தாப நிலைமைதான் காத்­தி­ருக்­கி­றது என்­பது உறுதி.
புத்­த­சா­ச­ன­வினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள இச்­சுற்று நிரு­ப­மா­னது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 10 மற்றும் 14 என்­ப­வற்றை விஞ்ச முடி­யாது என்­ப­துடன் நாட்டின் ஏனைய சட்­டங்­க­ளையும் குறிப்­பாக வக்பு சட்­டத்­தி­னையும் விஞ்ச முடி­யாது. அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 10 சட்­டத்தின் முன் யாவரும் சமம் எனவும், சட்டம் அளிக்கும் பாது­காப்பு அனை­வ­ருக்கும் பொது­வா­னது எனவும் குறிப்­பி­டு­கின்­றது. உறுப்­புரை 14 ஏற்­பா­டு­களின் கீழ் பிரசை ஒருவர் தனி­யா­கவும், கூட்­டா­கவும் தனது சம­யத்­தினை, நம்­பிக்­கை­யினை பின்­பற்­றவும், அதன் போத­னை­களின் படி வணக்­கங்­க­ளிலும், அனுட்­டா­னங்­களில் ஈடு­ப­டவும் சுதந்­திரம் உடை­யவர் எனக் குறிப்­பி­டு­கின்­றது. 
இவ் அர­சி­ய­ல­மைப்பின் ஏற்­பா­டுகள் குறித்­து­ரைக்­கின்ற விட­யங்­களில் மட்­டுப்­பா­டு­களை மேற்­கொள்­வ­தாக இருப்பின் அது பாரா­ளு­மன்ற சட்­டத்­தி­னா­லேயே மேற்­கொள்­ளப்­பட வேண்டும். மறு­பு­றத்தில், அர­சி­ய­ல­மைப்பின் உறுப்­புரை 170 குறிப்­பிடும் ஏற்­பா­டுகள் சுற்று நிருபம் என்­பது நாட்டின் சட்டம் அல்ல என விப­ரிக்­கின்­றது. இதனால் இச்­சுற்று நிரு­ப­மா­னது நாட்டின் அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­திற்கு முர­ணா­னது என்­ப­துடன் சட்ட வலி­தற்­றது. எனவே, புத்­த­சா­சன திணைக்­கள செய­லா­ள­ரினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள சுற்று நிரு­ப­மா­னது அவர் தனது நிருவாக அதி­கார வரம்­பெல்­லைக்கு அப்­பாற்­பட்டு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்கை ஒன்­றாகும்.
வக்பு சபை சட்டம் 

பள்­ளி­வா­சல்­களை பதிவு செய்தல் அவற்றின் பதி­வு­களை இரத்துச் செய்தல் மேலும் பள்­ளி­வா­சல்­களின் நிதி பரி­மாற்­றங்­களை கண்­கா­ணித்தல் முத­லிய அனைத்து கரு­மங்­களும் வக்பு சபைக்கு உரித்­தான விட­யங்­க­ளாகும். பள்­ளி­வாசல் ஒன்­றினை பதிவு செய்­வதில் ஏற்­ப­டு­கின்ற நிகழ்வு பிழைகள் மற்றும் சட்டப் பிழைகள் குறித்து கவனம் எடுக்­கவும், அவற்றை தீர்க்­க­வு­மான அனைத்து எற்­பா­டு­க­ளையும் வக்பு சட்டம் கொண்­டுள்­ளது. எனவே இக்­க­ரு­மங்­களை மேற்­கொள்­ள­வென வக்­பு சபையும், முஸ்லிம் கலா­சார திணைக்­க­ளமும் நாட்டு சட்­டத்­தினால் தாபிக்­கப்­பட்டு செயற்­பட்டு வரு­கின்ற அதி­கார நிறு­வ­னங்­க­ளாகும். அவற்றின் செயற்­பா­டு­களில் தலை­யி­டு­வ­தற்கு புத்­த­சா­சன அமைச்­சுக்கோ அல்­லது அதன் செய­லா­ள­ருக்கோ அதி­காரம் எதுவும் கிடை­யாது. 
மேலும், பள்­ளி­வா­சல்­களின் நிரு­வாக விட­யங்கள் குறித்தும், எனைய அதன் நட­வ­டிக்­கைகள் குறித்தும் ஏனைய சட்டங்­க­ளுக்கும் வக்பு சட்­டத்­திற்கும் இடையில் முரண்­நிலை  
 தோன்­று­மாக இருந்தால் வக்பு சட்­டமே மேலோங்கும் எனவும், அத்­த­ரு­ணத்தில் வக்பு சட்­டத்­தினை கருத்திற் கொண்டே தீர்­மா­னங்கள் மேற்கொள்­ளப்­பட வேண்டும் எனவும் வக்பு சட்­டத்தின் பிரிவு 57ஆ குறிப்­பிட்டுக் கூறு­கின்­றது.
புத்தசாசனம் எதனை சாதிக்க எண்­ணு­கி­றது?
நாட்டில் பௌத்தம் மேலோங்க வேண்டும். எனவே ஏனைய வணக்­கத்­த­லங்­களில் மட்­டுப்­பா­டு­க­ளை­யும் கட்­டுப்­பா­டுக­ளையும் விதிக்க வேண்டும் என்­பது சிங்­க­ள-­ பௌத்த அர­சி­யலின் அடிப்­படைக் கொள்கை. நாட்டில் இவ்­வா­றான சிங்­க­ள-­ பௌத்த நட­வ­டிக்­கை­யினை புத்­த­சா­சன அமைச்சு முன்­னெ­டுப்­பது வியப்­புக்­கு­ரி­ய­தல்ல. ஆனால் அதனை அவர்கள் ஏன் பள்­ளி­வா­சல்­களில் மட்டும் தற்­கா­லத்தில் முன்­னெ­டுக்­கின்­றனர் என்­கின்ற கேள்வி எல்லோர் மத்­தி­யிலும் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. 
நாட்டில் பள்­ளி­வா­சல்கள் போன்று ஏனைய வணக்கஸ்தலங்­களை பதிவு செய்­யவோ ஒழுங்­க­மைக்­கவோ சட்­டங்கள் எதுவும் கிடை­யாது. அவற்றை தனது சுற்று நிரு­பத்தின் சூழ்ச்சி வலைக்குள் சிக்க வைப்­ப­துவும் அதன் மூலம் நாட்டில் புத்த சாச­னத்­தினை நிலை­பெறச் செய்யும் கனவை மெய்ப்­பிப்­பதும் மிகவும் சுல­ப­மான காரி­ய­மாக புத்த சாச­ன­வுக்கு தோன்­றலாம். ஆனால் முஸ்­லிம்­களின் வணக்கஸ்தல­மான பள்­ளி­வா­சல்கள் தொடர்பில் நட­வ­டிக்கை மேற்­கொள்ள நாட்டில் ஏற்­க­னவே சட்டம் காணப்­ப­டு­கி­றது. இதனால் அச்­சட்­டங்­களை நீக்­கு­வதும் அல்­லது அவற்றின் ஏற்­பா­டு­களை மீறி தமது திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் அவ்­வப்­போது சில உபா­யங்­க­ளையும், போராட்ட வழி­க­ளையும் அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் மேற்­கொள்ள வேண்­டிய நிலைமை சிங்­க­ள-­ பௌத்த பேரி­ன­வா­தத்­திற்கு உண்டு. இதற்கு நியா­ய­மான கால இடை­வெ­ளியும் தேவை­யாக அமையும். இதன் கார­ண­மா­கவே, தற்­போது பள்­ளி­வா­சல்கள் மீதான அடக்கு முறைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.
மறு­பு­றத்தில், தற்­போது நாடு கொண்­டுள்ள சர்­வ­தேச அழுத்­தத்­திற்குள் ஏனைய கிறிஸ்தவ மற்றும் இந்து ஆல­யங்கள் மீது இச்­சுற்று நிரு­பத்­தினை திணிக்க முற்­ப­டு­வது அர­சாங்­கத்தின் தான்­தோன்றித்தன­மான சிங்­க­ள-­ பௌத்த பேரி­ன­வாத நட­வ­டிக்­கை­யினை சர்­வ­தே­சத்­திற்கு தெளி­வாக படம் பிடித்து காட்­டி­விடும். 
ஏனெனில் அவ்­விரு சமூ­கங்­களும் சர்­வ­தேச தொடர்­பு­களில் நன்கு ஊறித் திளைத்­தவை. இத­னாலும் அவற்றின் வணக்­கஸ்­த­லங்கள் மீதான அடக்­கு­முறை அவர்­க­ளு­டைய நிகழ்ச்சித் திட்­டத்தில் பிற்­போடப்பட்­டி­ருக்­கலாம். ஆனால் முஸ்­லிம்கள் சர்­வ­தேச ரீதியில் நசுக்­கப்­பட்டு வரு­கின்­ற­வர்கள், அவர்களை நசுக்குவதன் மூலமே அரசுக்கும் சர்வதேச அளவில் பாராட்டுகள் கிட்ட வாய்ப்புள்ளது. அதேவேளை நசுக்கப்படும் அல்லது அடக்கி ஒடுக்கப்படுகின்ற முஸ்லிம்களின் குரலை சர்வதேசம் எப்போதும் கணக்கில் எடுக்காது என்பதனையும் சிங்கள- பௌத்த அரசாங்கம் நன்கு விளங்கி வைத்திருக்கின்து.
 முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?

கடந்த காலங்களில் விட்ட அதே பிழைகளையும் தவறுகளையும் முஸ்லிம் சமூகம் மீண்டும் அரங்கேற்ற முற்படக் கூடாது. மாறாக அவற்றில் இருந்து தமது போராட்டத்திற்கென படிப்பினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவரை காலமும் பள்ளிவாசல்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து மேற்கொண்ட தீர்மானங்கள் எதுவாக இருப்பினும் அவற்றால் எமது முஸ்லிம் சமூகம் பெற்றுக் கொண்டது எதுவுமில்லை. இதற்கு கடந்த காலங்களில் இனவாத அச்சுறுத்தல்களுக்கு உள்ளான 30 பள்ளிவாசல்கள் தற்போது சான்றாய் எம்முன் காணப்படுகின்றன. 
நாட்டின் ஒரு கோடியிலுள்ள பள்ளிவாசலில் ஏற்படுகின்ற சிறு சிதறலையும் நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்
தேசத்தின் பிரச்சினையாக நாம் கருத வேண்டும். வேறுபாடுகளை விட்டு, ஜமாஅத் பிரிவினைகளை விட்டும் இந்த விடயத்திலாவது நாம் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். 
தற்காலிகமான, சுயநலம் வாய்ந்த தீர்வுகளிலும் திட்டங்களிலும் கவனம் செலுத்துவதனை விடுத்தும் நிரந்தரமானதும், முஸ்லிம் சமூகத்திற்கு என்றும் பயன்தரக்கூடியதும், எதிர்கால சந்ததிகள் எம்மை போற்றும் வகையிலான அணுகுமுறைகளையும் தீர்வுளையும் கண்டு அதனைப் பெற்றுக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும். 
சோரம்போன அரசியல் தலைமைகளை நம்பி விலைபோகின்ற நாம் இனியாவது சட்டத்தினை நம்பி அதன் வழியில் நீதியை நிலை நாட்டும் முயற்சியில்  ஈடுபட உறுதிபூண வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக