செவ்வாய், பிப்ரவரி 25, 2014

மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் மன்னன் கைது

 
மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜோவாக்கின் எல் சாப்போ கஸ்மேன் லோயெரா.  இவனுக்கு வயது 56.  அமெரிக்காவுக்கு போதை பொருள் விநியோகம் செய்வதில் இவன் பெரும் பங்கு வகித்து வந்தான்.  கஸ்மேன் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.30 கோடி பரிசு தொகை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்து இருந்தது.

சுரங்க பாதை வீடுகள் 

அவனை கடந்த 13 ஆண்டுகளாக சர்வதேச போலீசார் தேடி வந்தனர்.இந்த நிலையில் அவன் மெக்சிகோவில் பசிபிக் கடற்கரை நகரமான மஷட்லானில் கைது செய்யப்பட்டான். அங்குள்ள ஓர் ஓட்டலில் பதுங்கியிருந்த அவனை போலீசார் கைது செய்தனர்.  அதன் பின்பு போலீசார் நடத்திய சோதனையில், கஸ்மேனுக்கு 46 சொகுசு கார்கள், 16 வீடுகள் மற்றும் 4 பண்ணை வீடுகள் இருந்துள்ளன.
அவனுக்கு சொந்தமான வீடுகளில் 7 வீடுகள் சுரங்க பாதை கொண்டதாக அமைந்துள்ளது.  இதனால், போலீசார் அவனை கைது செய்ய முற்படும்போது தப்பித்து செல்வதற்கு வசதியாக இந்த சுரங்க பாதை இருந்துள்ளது.  இந்த சொத்துக்களை தவிர்த்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
அமெரிக்கா கோரிக்கை
அவற்றில் பெரிய வகை ஆயுதங்கள், கைத்துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவையும் அடங்கும்.  அமெரிக்காவிற்கு 25 சதவீத போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் கஸ்மேனுக்கு தொடர்பு இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தற்போது, இவனை நாடு கடத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக