செவ்வாய், பிப்ரவரி 25, 2014

உலக டென்னிஸ் தர வரிசை: 78-வது இடத்தில் சோம்தேவ்

உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் முதலிடத்திலும், செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 2-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா 3-வது இடத்திலும், ஸ்பெயின் வீரர் டேவிட் பெரர் 4-வது இடத்திலும், அர்ஜென்டினா வீரர் டெல்போர்டோ 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர். 

டெல்லி ஓபன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மன் 18 இடங்கள் முன்னேறி 78-வது இடம் பிடித்துள்ளார். 2011-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் சோம்தேவ் 62-வது இடத்தை பிடித்ததே அவரது சிறந்த தர வரிசையாகும். டெல்லி ஓபன் போட்டியில் முதல் சுற்றில் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 3 இடங்கள் பின்தங்கி 146-வது இடம் பெற்றுள்ளார். 

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் 10-வது இடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா 16-வது இடத்திலும், மகேஷ்பூபதி 41-வது இடத்திலும், திவிஜ் ஷரன் 65-வது இடத்திலும் உள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா 11-வது இடம் பிடித்துள்ளார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திலும், சீன வீராங்கனை லீ நா 2-வது இடத்திலும், போலந்து வீராங்கனை ராட்வன்ஸ்கா 3-வது இடத்திலும், பெலாரஸ் வீராங்கனை அஸரென்கா 4-வது இடத்திலும், ரஷிய வீராங்கனை ஷரபோவா 5-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக