இதுவரை எல்லோரும் ‘ஜெய் ஹிந்த்’ என்ற துடிப்பான முழக்கத்திற்கு சொந்தக்காரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் என நம்பியிருந்தார்கள்.ஆனால், நரேந்திர லூதர் எழுதிய ‘LEGENDOTES OF HYDERABAD’ என்ற நூலில் இன்னொரு வரலாறு கூறப்பட்டுள்ளது.
லூதரின் இந்நூலில் நேதாஜியுடனான பேட்டி, ஆவணரீதியான ஆதாரங்கள், அனுபவங்கள் ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து ’ஜெய் ஹிந்த்’ என்ற முழக்கம் எவ்வாறு உருவானது என்று விவரிக்கப்படுகிறது.ஸைனுல் ஆபிதீன் ஹஸன், ஜெர்மனியில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது நேதாஜிக்கு அறிமுகமானார்.
நேதாஜியின் ராணுவத்தில் இணைந்தபோது ஹஸனிடம், ராணுவத்தை சந்திக்கும்போது முழக்கமிட ஒரு வார்த்தை தேவை என்று நேதாஜி கோரிக்கை விடுத்துள்ளார்.அப்போழுது ஹஸன் கூறிய வார்த்தைதான் ‘ஜெய் ஹிந்த்’.இவ்வாறு நாட்டின் அதிகாரப்பூர்வ முழக்கமாக ’ஜெய் ஹிந்த்’ மாறியது என்று இந்நூல் கூறுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக