புதன், பிப்ரவரி 26, 2014

ஜேம்ஸ் பாண்ட்' கைத்துப்பாக்கி, கைக்கெடிகாரம் ஏலம்

துப்பறியும் சாகச கதை அம்சம் கொண்ட 'ஜேம்ஸ் பாண்ட்' சினிமாப்படங்கள் உலக அளவில் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன. இந்த படங்களில் வரும் கதாநாயகன் புதுமையான கார்கள், கைத்துப்பாக்கி, கைக்கெடிகாரம் போன்றவற்றை பயன்படுத்தி அசத்துவார்கள். 


இந்த வகையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஜெர்மனி நிறுவனம் உருவாக்கிய நவீன கைத்துப்பாக்கி, கைக்கெடிகாரம் இடம் பெற்றது. இவை ரேடியோ கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடியவை.


தற்போது இந்த 2 அரிய சாதனங்களும் கலிபோர்னியாவில் ஏலத்தில் விடப்பட இருக்கின்றன. கைத்துப்பாக்கி 1,399 டாலர்கள் என்றும் கைக்கெடிகாரம் 399 டாலர்கள் என்றும் விலை நிர்ணயித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக