செவ்வாய், மே 08, 2012

வசுந்தராஜேவிடம் மண்டியிட்ட பா.ஜ.க!

ஜெய்ப்பூர்:காரியம் சாதிக்க எதனையும் செய்ய தயாராக இருக்கும் பா.ஜ.க, வசுந்தராஜே சிந்தியாவிடம் அடிபணிந்துள்ளது.
பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்த மூத்த தலைவர் கட்டாரியா திட்டமிட்டிருந்த யாத்திரையைத் தொடர்ந்து உருவான உள்கட்சி பிரச்சனையில் வசுந்தராஜே சிந்தியா விடுத்த மிரட்டலுக்கு பணியும் விதமாக ராஜஸ்தானை பொருத்தவரை பா.ஜ.க.வின் ஒரே தலைவர் வசுந்தரா ராஜேதான் என அந்தக் கட்சி அறிவித்துள்ளது

இவ்விவகாரம் பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று(திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியது:
ராஜஸ்தானில் சூழ்ந்திருந்த மேகம் கலைந்து விட்டது. விரைவில் மழையை எதிர்பார்க்கிறோம். கட்டாரியாவின் யாத்திரை தொடர்பாக ஏற்பட்ட குழப்பம் இப்போது தீர்க்கப்பட்டு விட்டது. ராஜஸ்தானை பொருத்தவரை வசுந்தரா ராஜே சிந்தியாதான் சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஒரே தலைவர் என்று ஜவடேகர் குறிப்பிட்டார்.
அருண் ஜேட்லி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் நேற்று வசுந்தராவை தொலைபேசியில் தொடர்புகொண்டு தாஜா செய்து சமாதானப்படுத்தினர். “ராஜஸ்தானை பொருத்தவரை, பாரதிய ஜனதா கட்சியே வசுந்தராதான்” என்று அவர்கள் கூறினர்.
இதனைத்தொடர்ந்து வசுந்தராவிடம் ராஜிநாமா கொடுத்த எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் தங்கள் ராஜிநாமா கடிதங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வர் என்று கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக