செவ்வாய், மே 22, 2012

அமைச்சர்க‌ள்; ஆனா அம‌ை‌ச்ச‌ர்க‌ள் அ‌ல்ல

புதுக்கோட்டை இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு செல்லும் அமைச்சர்கள், அமைச்சர்களாக செல்லாமல், கட்சி நிர்வாகிகளாகவே வலம் வரவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவுக்கிணங்க, எந்தவித போலீஸ் பந்தாவும் இல்லாமல், சாலையோர உணவு விடுதியில் சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி மதிய உணவு சாப்பிட்டார். 
புதுக்கோட்டை தொகுதி‌க்கு ஜூ‌ன் 12ஆ‌மதே‌தி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க. சார்பில் கார்த்திக் தொண்டைமானு‌ம்,ே.ு.த‌ி.க. சா‌ர்‌பி‌ல் ஜா‌கீ‌ர் உசை‌னபோட்டியிடுகி‌ன்றன‌ர். வேட்பு மனு தாக்கல் கடந்த 18ஆ‌ம் தேதி தொடங்கியது. தே.ு.‌ி.க. வே‌ட்பாள‌ர் வே‌ட்பு மனு தா‌க்க‌ல் செ‌ய்து‌வி‌‌ட்டா‌ர். அ.தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இடைத்தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் பணிகளை கவனிக்க செல்லும் அமைச்சர்கள், அமைச்சர்களாக செல்லாமல், ஒரு கட்சி நிர்வாகியாக செல்லவேண்டும், அமைச்சர்களுக்குரிய எந்தவித அடையாளமும் அவர்களிடம் இருக்கக்கூடாது என்று முதல்வ‌ரு‌ம், அ.‌தி.மு.க. பொது‌ச் செயலருமான ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையொட்டி, அமைச்சர்கள் தங்கள் கார்களில் தேசிய கொடியை ஏற்றாமல், கட்சிக் கொடியை ஏற்றிக்கொண்டு செல்லவேண்டும். அமைச்சர்களுக்குரிய எந்த மரபையும் பின்பற்றக்கூடாது என்றும் முதல்வ‌ர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவுகளை, அனைத்து அமைச்சர்களும் பின்பற்றி வருகிறார்கள்.

தேர்தல் பிரசாரத்துக்காக புதுக்கோட்டை சென்ற சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி கட்சி கொடி ஏற்றிய காரில்தான் சென்றார். வழக்கமான போலீஸ் பாதுகாப்பு என்ற நடைமுறையை அவர் பின்பற்றவில்லை. அவர் செல்லும் வழியில், விழுப்புரம் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றார்.

பொதுவாக ஒரு அமைச்சர் சென்றால், போலீசார், அவர் சார்ந்த அதிகாரிகள் உடன் செல்வது வழக்கம். ஆனால் அமைச்சர் பா.வளர்மதி மதிய உணவு சாப்பிடுவதற்காக மிகவும் சாதாரண பொதுமக்கள் செல்லும் சாலையோர ஓட்டலில் தன்னுடன் மற்றொரு பெண்ணை மட்டும் அழைத்துக்கொண்டு மூலையில் உள்ள ஒரு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்ததை பார்த்த மக்கள் மிகவும் ஆச்சரியம் அடைந்தனர்.

சாப்பிட்டு முடிந்தவுடன் தன் பில்லுக்குரிய பணத்தை அவரே கொடுத்தது மட்டுமல்லாமல், அந்த உணவு விடுதி மேற்பார்வையாளரிடம் சாப்பாடு ருசியாக இருந்தது என்று பாராட்டி சென்ற பாங்கை, பொதுமக்கள் பாராட்டினர். மிகவும் அமைதியாக வெளியேறிய அவர், கட்சிக் கொடி ஏற்றிய காரில் ஏறியபோது, ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பல பெண்கள், மற்றும் ஆண்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்து, இந்த செயலுக்காக பாராட்டு தெரிவித்தனர்.

உடனே வளர்மதி, நாங்கள் அமைச்சர்கள் என்றாலும், அ.தி.மு.க. கட்சியின் சாதாரண தொண்டர்கள். அம்மா ஜெயலலிதா, எங்களை தேர்தல் கட்சி பணியாற்ற செல்லும்போதும், தேர்தல் பிரசாரத்தின்போதும் மிக எளிமையாக செல்லவேண்டும், மக்களோடு மக்களாய் கலந்து உரையாட வேண்டும் என்று கூறியிருக்கிறார். உங்கள் பாராட்டுக்கள் எல்லாம் அம்மாவுக்குதான். மிக்க நன்றி சொல்லி விட்டு புறப்பட்டு சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக