புதன், மே 30, 2012

கிங் பிஷேர் வங்கி கணக்குகளை மீண்டும் முடக்கியது வருமான வரி துறை

 It Dept Freezes Kingfisher Airlines
 டெல்லி: வருமான வரித்துறைக்கு பாக்கி வைத்ததால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் மீண்டும் முடக்கப்பட்டுவிட்டன.கடந்த பல மாதங்களாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனமானது நிதிச் சிக்கலால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஊழியர்களின் சம்பளத்துக்கும் கூட சிக்கலாகிப் போய் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வருமான வரித்துறைக்கு ரூ342 கோடி பாக்கி வைத்திருக்கிறது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம். இதில் வாரந்தோறும் ரூ9 கோடியை செலுத்துவதாக கிங்பிஷர் நிறுவனம் உறுதி அளித்திருந்தது. ஆனால் 2 வாரங்கள்தான் ரூ4.5 கோடி செலுத்தியது. அதன் பிறகு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பதாகத் தெரிகிறது.

ஏற்கனவே கலால் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் தலைவர் எஸ்.கே. கோயல், கிங்பிஷர் நிறுவனம் ரூ54 கோடி பாக்கி வைத்திருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக