சனி, ஆகஸ்ட் 30, 2014

நெல்லை மேயர் தேர்தலில் பிரபல அரசியல் கட்சிகள் 5 அணியாக போட்டி ?

நெல்லை மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்ந்தெடுக்க வருகிற 18–ந்தேதி உள்ளாட்சி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. சார்பாக நெல்லை மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வியாழன், ஆகஸ்ட் 28, 2014

காஸாவில் போர் நிறுத்தம்! – ஃபலஸ்தீன் காஸா போராளிகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி!

50 தினங்கள் நீண்ட இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களுக்கு ஒய்வு.எகிப்தின் மத்தியஸ்தத்தில் ஹமாஸும், இஸ்ரேலும் நீண்டகால போர் நிறுத்தம் உடன்படிக்கையைச் செய்துகொண்டன.காஸாவுக்கு எதிராக 2006-ஆம்
ஆண்டு இஸ்ரேல் அறிவித்த தடையை நீக்கவேண்டும் என்ற ஹமாஸின் முக்கிய கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரித்ததை தொடர்ந்து ஒப்பந்தம் அமலுக்குவந்துள்ளது.

கற்பழிப்பு வழக்குபதிவு: சதானந்த கவுடா மகன் திருமணம் நடைபெறுமா?

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடாவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்றிரவு குடகு பகுதியில் உள்ள குஷால் நகரில் நடந்தது.

பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்தது அரியானா ஜான்ஹிட் காங்கிரஸ்

அரியானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்தியிருந்த அரியானா ஜான்ஹிட் காங்கிரஸ் கட்சி இன்று பா.ஜ.க.கூட்டணியை முறித்துக்கொண்டது.

புதன், ஆகஸ்ட் 27, 2014

வெறும் 100 ரூபாயில் விமான டிக்கெட்: பயணிகளுக்கு ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை

ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா நாளை முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது.

பிரித்தாளும் அரசியல் மூலம் பா.ஜ.க வெல்ல முடியாது: நிதீஷ்குமார்!

பிரித்தாளும் அரசியல் மூலம் பாஜக வெற்றி பெற முடியாது என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார் கூறினார்.
பீகார் உள்ளிட்ட நான்கு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார், பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரானின் ஆதரவுக்கு நன்றி: காலித் மிஷால்!

ஸ்ரேலுக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளை எட்டுவதற்கு ஈரான் ஆதரவு பெரிதும் உதவியதாக ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மது பார்களுக்கு அனுமதி மறுப்பு: நீதிமன்றம் பாராட்டு

கேரளாவில் படிப்படியாக மதுவை ஒழிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி 418 பார்களுக்கான உரிமத்தை புதுப்பிக்க அம்மாநில அரசு மறுத்துவிட்டது.

செவ்வாய், ஆகஸ்ட் 26, 2014

கார் பார்க்கிங் செய்த போது மோதல்: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கைது

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தனது காரை பார்க்கிங் செய்த போது மோதலில் ஈடுபட்டதால் அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இடைத்தேர்தலில் காங். கூட்டணி 10 தொகுதிகளில் வெற்றி: பா.ஜனதாவுக்கு பின்னடைவு

மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநில அலுவலகம் திறப்பு விழாவில் பாப்புலர் ஃபரண்ட் மாநில செயலாளர் பங்கேற்பு!

எஸ்டிபிஐ கட்சியின் தொழிலாளர்கள் அமைப்பான எஸ்.டி.டி.யூ (SDTU- social democratic trade union) தொழிற்சங்கத்தின் மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று (ஆகஸ்ட்-25) சென்னையில் நடைபெற்றது.

இஸ்ரேலுக்கு புதிய தலைவலி: லெபனானில் இருந்தும் ராக்கெட் வீச்சு

காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகளை ஒடுக்குவதற்காக கடந்த 50 நாட்களாக சண்டையிட்டு வரும் இஸ்ரேல் நாட்டுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தும் விதமாக லெபனான் நாட்டில் இயங்கிவரும் போராளிக் குழுக்களும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014

மதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாள்களாக்கவேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு திக் விஜய் சிங் கண்டனம்!


ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசும் போது போது இந்தியா ஒரு இந்து நாடு இந்துத்துவம் இந்தியாவின் அடையாளம் என்று அறிவீனமாக பேசினார்.

செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014

சிலாங்கூரில் ஆட்சியை இழக்கிறது பி.கே.ஆர்?:6 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நீக்கம்

கடந்த சனிக்கிழமை பி.கே.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலாங்கூர் மந்திரி புசார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம், இன்று மாலை பி.கே.ஆர் மற்றும் ஜ.செ.க-வைச் சேர்ந்த 6 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களை உடனடி பதவி நீக்கம் செய்தார்.

எகிப்தில் நுழைய மனித உரிமை கண்காணிப்பு இயக்குனருக்கு அனுமதி மறுப்பு

எகிப்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து இறக்கி அதிபர் பதவியைக் கைப்பற்றிய முகம்மது மோர்சி அங்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால்  பதவி இறக்கம் செய்யப்பட்டார்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு இனக்கலவரங்கள் அதிகரிப்பு: சோனியா

மத்தியில் பா.ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு இனக்கலவரம் கடுமையாக அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய ஆப்பிரிக்காவில் முதல் முஸ்லிம் பிரதமர்

மத்திய ஆப்பிரிக்காவில் முதல் முஸ்லிம் பிரதமராக முஹம்மது காமவுனை அதிபர் காதரின் ஸாம்பா பன்ஸா (Picture: President Catherine Samba) நியமித்துள்ளார்.

திங்கள், ஆகஸ்ட் 11, 2014

பிரிட்டீஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய வீர சவார்க்காரை சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்க மோடி அரசு முயற்சி!

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘Road to Freedom' என்ற ஆவணப்படத்தில் வீரசவார்க்காருக்கு முக்கிய பங்கினை அளிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.சவார்க்கார் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இதில் உட்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

களக்காடு அருகே ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கார் மீது கல்வீச்சு: இந்து முன்னணியினர் 2 பேர் கைது

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் பரிசுத்த தோமா கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று சிறப்பு ஜெபக்கூட்டம் நடந்தது. இதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கலந்து கொண்டு கிறிஸ்தவ பிரச்சாரம் செய்தார்.

வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

புதன், ஆகஸ்ட் 06, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ் டீ சர்ட் விவகாரம்! இராமநாதபுரத்தில் இளைஞர்கள் கைது! கண்டிக்கத்தக்கது : எஸ்.டி.பி.ஐ



இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கடந்த ஈகை பெருநாள் தினத்தன்று இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சில இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் என்று அச்சிடப்பட்ட டீ-சர்ட்டுகளை அணிந்து புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தனர். இந்த புகைப்படமானது சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டு அதுதொடர்பாக சில இளைஞர்கள் உளவு மற்றும் காவல்துறையால் விசாரணை செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது தற்போது ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய பொம்மை அரசுக்கு எதிராக போராடி வரும் போராளிகள் என கூறப்படுகிறது. எனினும் அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சமீபத்தில் அவர்கள் கைப்பற்றிய பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்த இந்தியாவை சேர்ந்த செவிலியர்களை பத்திரமாக தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதுமுதல் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பற்றிய செய்திகள் பிரபலமடைந்தன.
இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பின்புலம் பற்றி இதுவரை அறியப்படாத நிலையில் அவர்களின் சமீபத்திய பிரபலத்தை வைத்து தொண்டியை சேர்ந்த சில இளைஞர்கள் அந்த அமைப்பின் பெயர் பதிந்த டீ-சர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளனர். அமைப்பின் பின்புலம் பற்றி தெரியாமல் அவர்கள் இவ்வாறு செய்தது தவறு, அங்கீகரிக்க கூடிய செயல் அல்ல. இருப்பினும் அவர்கள் எந்த உள்நோக்கமும் இன்றி, வெறும் வேடிக்கைக்காக உற்சாக மிகுதியில் அவ்வாறு அவர்கள் செய்துள்ளனர். இதனை முதலில் அவர்களை அழைத்து விசாரித்த காவல்துறை அதிகாரியே தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் அவர்கள் அந்த புகைப்படத்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்க மாட்டார்கள்.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் இந்தியா உட்பட உலகில் எங்கும் தடைசெய்யப்பட்ட அமைப்பு அல்ல. ஆகவே தடை செய்யப்படாத ஒரு அமைப்பின் பெயரை பதிந்த ஆடைகளை அணிவது எந்த வகையிலும் குற்றமாகாது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல அமைப்புகளின் தலைவர்களின் படங்கள், கொடிகள் போன்றவற்றை பலரும் பயன்படுத்தும் நிலையில், தடை செய்யப்படாத ஒரு அமைப்பின் பெயர் பதிந்த ஆடையை, எந்த உள்நோக்கமும் இன்றி வேடிக்கைக்காக உற்சாக மிகுதியில் அணிந்த இளைஞர்களை, முஸ்லிம்கள் என்பதற்காக அவர்களை பெரும் தீவிரவாதிகள் போன்று, சித்தரித்து கைது செய்து விசாரணை செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக முதலில் அவர்கள் அழைக்கப்பட்டு காவல்துறையால் எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளனர். இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது. ஆனால் மீண்டும் அவர்கள் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்திருப்பது என்பது கண்டனத்திற்குரியது. ஆகவே தமிழக அரசு உடனடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பசுவதை தடைச் சட்டம் கொண்டு வர இந்துத்துவா அமைப்பு கோரிக்கை

நாட்டில் பசு வதையை தடைசெய்ய வேண்டும் என்று ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி அமைப்பு (ஹெச்ஜேஎஸ்) வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் அமைதியாக இருக்கக்கூடாது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

சீனாவில் மீண்டும் வெள்ள அபாயம்: நிலநடுக்கப் பலி 600-ஐ நெருங்கியது

சீனாவில் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் உள்ள சாவோடாங் நகரில் லூதியன் பகுதியில் கடந்த 3-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம் பிடித்தனர். மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. 

ம.பி உயர்நீதிமன்ற நீதிபதி மீது பெண் நீதிபதி பாலியல் புகார்!

மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக மாவட்டக் கூடுதல் நீதிமன்ற பெண் நீதிபதி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அவர் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார்.

ஜித்பகதூர் விவகாரத்தில் பொய் சொன்ன மோடி பேஸ்புக் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது

பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஞாயிறு, திங்கள் இரு நாட்கள் நேபாளம் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இந்த பயணத்தின் போது நரேந்திரமோடி தன்னுடன் 26 வயது ஜித்பகதூர் என்ற இளைஞரையும் அழைத்து சென்றார்.

ஜித்பக்தூரின் சொந்தநாடு நேபாளம் ஆகும். 1998–ல் வேலை தேடி ராஜஸ்தான் வந்த அவர் வழிதவறி குஜராத் சென்று விட்டார். திக்கு தெரியாமல் தவித்த அவருக்கு அப்போது 10 வயது.அவர் ஏதேட்சையாக நரேந்திரமோடியை சந்திக்க நேர்ந்தது. பகதூர் மீது இரக்கப்பட்ட மோடி அவரை தன் கண்காணிப்பில் வளர்த்து வந்தார். 

இதைத் தொடர்ந்து ஜித்பகதூரை பிரதமர் மோடி தன்னுடன் நேபாளத்துக்கு அழைத்து சென்று அவர் பெற்றோரிடம் ஒப்படைத்தார்.பிரதமர் நரேந்திரமோடியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் மோடியால் ஒப்படைக்கப்பட்ட ஜித்பகதூர், ஏற்கனவே கடந்த 2012–ம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

2012–ம் ஆண்டு தன் குடும்பத்தினரை சந்தித்ததை ஜித்பகதூர் தன் ‘‘பேஸ்புக்’’ இணைய தள புத்தகத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘‘ஹாய் பிரண்ட்ஸ், இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். ஏனெனில் நான் இன்று என் வீட்டில் இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள ஜித்பகதூர், 2012 ஆண்டு தன் குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட படத்தையும் அதில் இணைத்துள்ளார். இதன் முலம் ஜித்பகதூர் ஏற்கனவே நேபாளத்தில் உள்ள தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் 10 வயதில் ஆமதாபாத் வந்த ஜித்பகதூர் 16 வருடங்கள் கழித்து அவரது 26–வது வயதில்தான் நேபாளம் திரும்பி இருப்பதாக கூறப்பட்டது. மோடியும் தன் டூவிட்டர் பக்கத்தில் இது பற்றி பெருமையாக கூறி இருந்தார்.
இந்த தகவல் பொய் என்று பேஸ்புக் பக்கம் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் பொய் சொன்னது பிரதமர் மோடி என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

திங்கள், ஆகஸ்ட் 04, 2014

கீதையை கட்டாயம் கற்க வைத்திருப்பேன் - உச்சநீதிமன்ற நீதிபதியின் இந்துத்துவப் பேச்சு!

இந்திய தேசம் ஒரு பன்முக தன்மை கொண்ட மதச்சார்பற்ற தேசம் என்பதை ஆட்சியில் இருப்பவர்களும், சில அதிகாரிகளும் மறந்துவிடும் நோய் நீதிபீடத்தில் இருப்பவர்களை பிடித்துக்கொண்டது போலும்.

காஸாவில் பலியான குழந்தைகளின் பிரேதங்களை ஐஸ்கிரீம் ப்ரீஸரில் பாதுகாக்கும் அவலம்










காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களினால் பலியான பிஞ்சு குழந்தைகளின் பிரேதங்கள் அழுகாமல் இருக்க, போதுமான குளிர்சாதனப் பெட்டி வசதி இல்லாததால் அக்குழந்தைகளின் பிரேதங்களை ஐஸ்கிரீம் பெட்டியில் வைத்து பாதுகாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலின் விமானப் படைகளின் தாக்குதல்களால் காஸாவில் ரஃபா நகரில் உள்ள நஜ்ஜார் மருத்துவமனை தரைமட்டமாகியுள்ளது. இதனிடையே, தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் பலியானவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வழியின்றி தவிக்கும் மக்கள், குழந்தைகளின் உடல்கள் அழுகாமல் இருப்பதைத் தடுக்க பெரும் பாடுப்பட்டு வரும் நிலை அங்கிருக்கும் மனித ஆர்வலர்களின் நெஞ்சை உருக வைத்துள்ளது.   

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இந்தியா ஆதிக்கம்: 64 பதக்கத்துடன் 5-வது இடம்

20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் கடந்த 23–ந்தேதி தொடங்கியது. நேற்றுடன் போட்டி முடிந்தது. கோலாகல நிறைவு விழாவுடன் காமன்வெல்த் விளையாட்டு திருவிழா முடிந்தது.

யு.பி.எஸ்.சி: டெல்லியில் ராஜ்நாத் சிங் வீடு முற்றுகை!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வு எழுதுபவர்கள், இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் (என்எஸ்யுஐ) உள்ளிட்டோர் தில்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இல்லத்தை சனிக்கிழமை காலையில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சனி, ஆகஸ்ட் 02, 2014

சிக்ஸ்பேக் லிஸ்டில் இனி அதர்வன்

திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வன், அண்மையில் இயக்குனர் பாலாவின் ‘பரதேசி’ படத்திற்கு பின் திரையுலகில் பலரின் பாராட்டை பெற்று வருகின்றார்.

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் கைது !

கிளாஸ்கோவில் நடந்து வரும் காம்ன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த 29 வயதான பிரான்ஸ் எடோன்டி,

குற்றாலம் மெயினருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கும்பக்கோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது! – எஸ்.டி.பி.ஐ

கும்பக்கோணம் பள்ளி தீ விபத்து வழக்கின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என  எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2014

MH17: உறவினர் அற்ற சடலங்களை அரசாங்கமே நல்லடக்கம் செய்யும்

கடந்த ஜூலை 17-ஆம் தேதி உக்ரைன் எல்லையில் சுட்டுவீழ்த்தப்பட்ட MH17 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் இல்லாத பட்சத்தில் அவர்களின் சடலங்களை அரசாங்கமே அடக்கம் செய்யும் என மகளிர் குடும்பம், மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரொஹானி அப்துல் காரிம்  தெரிவித்தார்.

ஸின்ஜியாங்கில் மோதல்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான முஸ்லிம்கள் படுகொலை

உய்கூர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் சீனாவின் ஸின்ஜியாங்க் மாகாணத்தில் உள்ள யர்க்கந்த் நகரத்தில் மோதல் மற்றும் போலீசு துப்பாக்கிச்சூட்டில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும், பலர் கடுமையான காயமும் அடைந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் அதிகரித்து வரும் வகுப்பு கலவரங்கள் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கவலை!


உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடந்த வகுப்புவாத நிகழ்வுகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஓ.எம்.ஏ.ஸலாம் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.