புதன், ஏப்ரல் 30, 2014

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை - ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

8 அணிகள் இடையிலான 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெறும். 

7-வது கட்ட தேர்தல்: 89 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கியது

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல் 9 கட்டமாக அறிவிக்கப்பட்டதில், 6 கட்ட தேர்தல்கள் 349 தொகுதிகளுக்கு நடந்து முடிந்துவிட்டன. 7-வது கட்டமாக இன்று 89 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது இந்த தேர்தலில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 

காங்கிரஸ் - பாஜக இடையே மறைமுக உடன்பாடு: கேஜ்ரிவால் குற்றச்சாட்டு

பெண் வேவு பார்க்கப்பட்ட விவகாரம், ராபர்ட் வதேரா சர்ச்சையை மேற்கோள் காட்டிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், காங்கிரஸும் பாஜகவும் மறைமுக உடன்பாடு கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தை தேடுதல் வேட்டையில் புதிய தகவல்கள்

மாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலிய கடல்சார் ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 19–வது லீக் ஆட்டத்தில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்–ஷேன் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. 

செவ்வாய், ஏப்ரல் 29, 2014

விமான விபத்து தவிர்ப்பு: மயிரிழையில் உயிர் தப்பிய 59 பேர்

ஜப்பானின் பீச் விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று நேற்று 59 பயணிகளுடன் இஷிகாகி தீவுகளிலிருந்து ஒகினவாவில் உள்ள நாஹா தீவுக்கு சென்றுள்ளது.

பூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்லாசம்: டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பானதால் ஓட்டம்

வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி ஸ்ரீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது. 

வெடிப்பொருட்கள் பதுக்கல்: கேரளாவைச் சார்ந்த பிஜு தாமஸ், ஹரியானாவில் கைது!

தேர்தலுக்கு சற்று முன்பு கர்நாடகா மாநிலம் கார்க்கலையில் டன் கணக்கில் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த வழக்கில் முக்கிய நபரான கேரளா மாநிலம் கோட்டயத்தை ச்சார்ந்த பி.கே.பிஜு தாமஸை ஹரியானாவில் வைத்து கர்நாடகா போலீஸ் கைதுச் செய்தது.

இஃவானுல் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதீஃ உள்பட 683 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பு!

இஃவானுல் முஸ்லிமீனின் உயர் தலைவர் முஹம்மது பதீஃ உள்பட 683 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரணத்தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.தெற்கு மாகாணமான மினியாவில் கடந்த ஆண்டு சர்வாதிகார ராணுவ அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் காவல் நிலையத்தை தாக்கி ஒரு போலீஸ் காரரை கொலைச் செய்து, இழப்புகளை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இத்தனை பேருக்கும் நீதிமன்றம் மரணத்தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளது.

காணாமல் போன விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை எட்டுகிறது: ஆஸி.பிரதமர்!

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை அடைந்துள்ளது என்று கூறுகிறார் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட். அந்த விமானத்தின் சிதிலங்கள் இனியும் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பில் கிடைக்கும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: ஜப்பான் வீரர் நிஷிகோரி சாம்பியன்

உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தை துவம்சம் செய்த சூறைக்காற்று

அமெரிக்காவின் மிசிசிப்பி மாநிலத்தின் பல பகுதியை தாக்கிய பயங்கர சூறைக்காற்று, சில வீடுகள் மற்றும் மரங்களையும், விளம்பரப் பலகைகளையும் சாய்த்து, வீழ்த்தி துவம்சம் செய்தது. பல வீடுகளுக்கு செல்லும் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யா மிது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் புதிய பொருளாதார தடை விதித்தன

உக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தனர். 

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 5வது முறையாக வெற்றி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 18-வது ஆட்டத்தில் பெங்களூர்-பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

மோடி பேச்சில் கண்ணியம் இல்லை: ராகுல் சரமாரி தாக்கு

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, எதிரணி தலைவர்களை விமர்சித்துப் பேசும்போது கண்ணியத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

தலித்துகள் இந்துக்கள் அல்லர், பாஜகவின் சதி வலையில் சிக்கிவிடாதீர்கள்: மாயாவதி எச்சரிக்கை!

அதிகாரத்தை குறி வைத்து தலித்துகளை பா.ஜ.க, இந்துக்களாக சித்தரிப்பதாக மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.கவின் இந்த சதி வலையில் தலித்துகள் சிக்கிவிடக் கூடாது என்று லக்னோவில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மாயாவதி எச்சரிக்கை விடுத்தார்.

திங்கள், ஏப்ரல் 28, 2014

ஐ.பி.எல் : ஸ்மித், மெக்கல்லம் அதிரடியில் சென்னை அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 17வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

ஐ.பி.எல்.: மும்பை அணி தொடர்ந்து 4 வது தோல்வி

ஐ.பி.எல். தொடரின் 16-வது லீக் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்தது.

சவுதியில் மெர்ஸ் நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தது

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிய கண்டத்தில் வேகமாக பரவி நூற்றுக்கணக்கான உயிர்களை பறித்துச் சென்ற 'சார்ஸ்' கிருமிக்கு இணையான 'மெர்ஸ்' கிருமியின் தாக்குதலால் பரவி வரும் மர்ம நோயானது, கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டாலும் இதற்கான மாற்று மருந்தோ, தடுப்பு மருந்தோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உக்ரைன் விவகாரம்: ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை - ஜி-7 நாடுகள் முடிவு!

உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக அந்த நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடை விதிக்க ஜி-7 நாடுகள் தீர்மானித்துள்ளன.

வகுப்புக் கலவரங்கள் இந்தியாவில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது: மத்திய உள்துறை அமைச்சகம்!

இந்தியாவில் 2013-ஆம் ஆண்டு கடந்த ஆண்டை விட வகுப்புக் கலவரங்கள் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.முஸஃபர் நகர் கலவரம் உள்ளிட்ட பெரிய கலவரங்கள் நடந்த உத்தரபிரதேச மாநிலம் கலவரங்களில் முன்னணியில் உள்ளது.இங்கு கடந்த 2012-ஆம் ஆண்டு 118 கலவரங்கள் நடந்துள்ளன.2013-ஆம் ஆண்டு 247 ஆக கலவரங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அழகிரி ஆதரவாளர்கள் 10 பேர் திமுகவிலிருந்து திடீர் சஸ்பெண்ட்

மு.க.அழகிரியின் ஆதரவாளர் களான முன்னாள் எம்எல்ஏ கவுஸ்பாட்சா உள்பட 10 பேர், திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

திமுக. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஹாங்காங் செல்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவருடன் மனைவி துர்கா, மருமகள், பேரன் – பேத்திகள் 7 பேர் வந்திருந்தனர்.

ஹமாஸ்-ஃபதஹ் உடன்படிக்கை:அரபு நாடுகள் ஆதரவு! பேச்சுவார்த்தையில் இருந்து இஸ்ரேல் விலகியது!

ஃபலஸ்தீனில் பிரபல அமைப்புகளான ஹமாஸும், ஃபதஹும் நல்லிணக்க உடன்படிக்கை செய்துக்கொண்டதை தொடர்ந்து இஸ்ரேல் ஃபலஸ்தீன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது.கடந்த வியாழக்கிழமை ஐந்து மணிநேரம் நீண்ட இஸ்ரேலின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆப்கானிஸ்தானில் 2ம் சுற்று அதிபர் தேர்தல்

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத் துறை மந்திரி அப்துல்லா அப்துல்லா 44.9 சதவீதம் வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளரான உலக வங்கியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அஷ்ரப் கனி 31.5 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

மூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் ஆப் சுவிட்ச்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

ஒளி உணர்வுகள் மூலம் நரம்பு செயல்பாடுகளை நிறுத்தி மூளையின் செயல்பாடுகளை நிறுத்தும் புதிய கண்டுபிடிப்பை விஞ்ஞானிகள் நிகழ்த்தியுள்ளனர்.

பிராமணர்களின் எதிர்ப்பு: பா.ஜ.கவுக்கு உ.பியில் தலைவலி!

பாரதீய ஜனதா கட்சி ஒ.பி.சி கட்சியாக மாறிவிட்டதாக பிராமண தலைவர்கள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு பா.ஜ.கவுக்கு உ.பியில் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் உள்ளிட்ட சமூகத்தினரை கட்சியில் நெருங்கவைக்க பா.ஜ.க நடத்தும் முயற்சிகள் பிராமணர்களை கொதிப்படைய வைத்துள்ளதாம்.

பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை: ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.பாலு ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்

மூன்றாவது அணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்: மஹராஷ்ட்ரா முதல்வர்!

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராவதைத் தடுப்பதற்காக, மத்தியில் 3வது அணியுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவாண் கருத்து தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

கோவை ஆருகிலுள்ள கருமத்தம்பட்டி பேரூராட்சியில், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான 46.17 ஏக்கர் நிலம் உள்ளது. இதை விற்க முடிவு செய்த உரிமையாளர்கள், கடந்த ஆண்டு ஜூலையில் கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒரு “ரியல் எஸ்டேட்” உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர் பெயருக்கு, 'பவர்' வழங்கினர்.

ராம்தேவின் அறக்கட்டளை வங்கிக் கணக்குகளை ஆராய தேர்தல் ஆணையம் உத்தரவு!

மக்களவைத் தேர்தலில் சில அரசியல் கட்சிகளுக்காக யோகா குரு ராம்தேவின் 3 அறக்கட்டளைகள் பெரிய அளவில் செலவு செய்திருப்பதாக வந்த புகார்களையடுத்து அந்த அறக்கட்டளைகளின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்யும்படி வருமான வரித்துறையை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தங்க கம்மலை விழுங்கிய கோழி வயிற்றை அறுத்து மீட்ட தம்பதி

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே  கிடங்கன்கரைவிளை பகுதியை சேர்ந்தவர் ரத்தினசபாபதி. இவரது  மனைவி அகிலா. இவர் தனது 4 கிராம் கம்மலை கழற்றி  சுத்தப்படுத்துவதற்காக வீட்டில் இருந்த மேஜை மீது வைத்துவிட்டு  சென்றுள்ளார்.

வெள்ளி, ஏப்ரல் 25, 2014

வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார்

தஞ்சாவூர் தொகுதியில் வாக்குப்பெட்டி எந்திரத்தை திறந்து வாக்குகளை எண்ணிக்கொண்டிருந்த வாக்குச் சாவடி அதிகாரி பிடிபட்டார்.  

கர்நாடகாவில் தேவேகவுடா கட்சி வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கர்நாடக மாநில தலைவர் கிருஷ்ணப்பா.

சிதம்பரம் அருகே பா.ம.க வெறி செயல் : 25 வீடுகள் சூறை

சிதம்பரம் அருகே உள்ளது வடக்குமாங்குடி கிராமம். இங்கு தேர்தல் பிரசாரத்தின் போது பா.ம.க. – விடுதலை சிறுத்தை கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது.

சென்னை: ஓட்டு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தாலும், 6 மணிக்கு வரிசையில் நின்றிருந்த வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் சுமார் 30 வாக்குச்சாவடிகளில் இரவு 7 மணிவரை வாக்காளர்கள் ஓட்டுப்போட்டனர்.

மோடி மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல்

குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி, வாரணாசி தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஊழல் நிறைந்த காங்கிரஸ், பா.ஜ.க.வை அகற்ற வேண்டும்: யோகேந்திர யாதவ்

ஆம் ஆத்மி கட்சி தலைவர் யோகேந்திர யாதவ்  பாட்டியாலா மக்களவை தொகுதி வேட்பாளர் தரம்வீரா காந்தியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா

பெங்களூர்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான 11-வது ஐ.பி.எல். லீக்போட்டி சார்ஜாவில் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.

மக்களவைத் தேர்தல்: தமிழக வாக்குப்பதிவு நிலவரம்

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 72.8 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்தத் தகவலை, தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு அமைதியான முறையிலேயே நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.99 வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக தென் சென்னையில் 57.86% வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தில் 72.8 சதவீத வாக்குகள் என்பது, கடந்த 1967-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் ஆகும் என்பது கவனிக்கத்தக்கது.
இறுதி நிலவரப்படி, தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரம் வருமாறு:
தொகுதி
காலை 9 மணி
காலை 11 மணி
மதியம் 1 மணி
மதியம் 3 மணி
மாலை 5 மணி
இறுதி நிலவரம்
திருவள்ளூர் (தனி)
10%
34.4%
44%
58%
70.4%
74.75%
வட சென்னை
12.62%
27.4%
41%
50.4%
60.29%
64.58%
தென் சென்னை
10%
26.3%
39.5%
49.3%
56.84%
59.86%
மத்திய சென்னை
11%
25.4%
35%
48.55%
59.42%
62.23%
ஸ்ரீபெரும்புதூர்
11%
30.6%
41%
53%
59.24%
61.19%
காஞ்சிபுரம் (தனி)
15%
36.4%
44%
59.3%
65.53%
64.08%
அரக்கோணம்
8%
37.8%
47%
64%
74.37%
77.02%
வேலூர்
16.05%
34.3%
51.5%
59.8%
70.3%
72.32%
கிருஷ்ணகிரி
8.67%
38.9%
45.4%
62%
74.35%
77.33%
தருமபுரி
9%
42.9%
51.4%
71.2%
79.32%
80.99%
திருவண்ணாமலை
15%
39.1%
52%
64%
74.03%
77.48%
ஆரணி
14.2%
41%
47%
63%
77.74%
78.66%
விழுப்புரம் (தனி)
9%
37.1%
43%
65.1%
74.69%
76.02%
கள்ளக்குறிச்சி
11%
38.7%
44.5%
66.9%
75.62%
77.23%
சேலம்
14.6%
34.92%
49.5%
62%
74.35%
77.29%
நாமக்கல்
14%
37.8%
51.83%
64%
76.29%
79.15%
ஈரோடு
18%
37.8%
54%
64.4%
73.54%
75.61%
திருப்பூர்
17.13%
35.8%
47.3%
64%
72.78%
71.26%
நீலகிரி (தனி)
11%
32.3%
46.45%
60.33%
69.77%
74.3%
கோயமுத்தூர்
15%
32.7%
39%
56.7%
66.15%
68.94%
பொள்ளாச்சி
16%
33.4%
42%
61%
71.06%
72.84%
திண்டுக்கல்
16%
39.8%
46.8%
64%
75.1%
78.29%
கரூர்
18.64%
39.6%
56.48%
69.4%
77.74%
79.88%
திருச்சி
16%
34.6%
46.25%
56.8%
67.63%
70.43%
பெரம்பலூர்
17.71%
39%
50.3%
66.6%
75.42%
80.12%
கடலூர்
17.4%
38%
52%
65.7%
76%
77.6%
சிதம்பரம் (தனி)
17.6%
37.6%
54.7%
67.2%
76.39%
79.85%
மயிலாடுதுறை
15.89%
34.5%
41%
55.8%
67.63%
75.4%
நாகப்பட்டினம் (தனி)
17.13%
37.3%
53%
62.4%
73.2%
76.69%
தஞ்சாவூர்
17.32%
39.5%
51%
63.2%
71.96%
75.02%
சிவகங்கை
16.09%
36.3%
49.71%
61.9%
69.82%
71.47%
மதுரை
15.94%
31%
49.33%
57%
62.65%
65.46%
தேனி
17.9%
36.9%
49.5%
62%
68.24%
72.56%
விருதுநகர்
16.66%
36.9%
58.47%
62.2%
70.39%
72.19%
ராமநாதபுரம்
15%
33.37%
51.75%
57.4%
65.8%
68.84%
தூத்துக்குடி
15.4%
33.28%
44.8%
57.6%
67.1%
69.12%
தென்காசி (தனி)
16.7%
35.68%
46.4%
61.8%
71.01%
74.3%
திருநெல்வேலி
14%
33.6%
48%
57%
66.33%
66.59%
கன்னியாகுமரி
15%
31
45%
55.6%
65.29%
65.15%
மொத்தம்
14.31%
35.28%
47.19%
60.52%
70.0%
72.8%
ஆலந்தூர் இடைத் தேர்தல்
11%
27.6%
40%
45.1%
62%
63.98%

வியாழன், ஏப்ரல் 24, 2014

பிரதமர் மன்மோகன் சிங் அசாமில் வாக்களித்தார்

பிரதமர் மன் மோகன் சிங் இன்று காலை அசாமில் உள்ள குவஹாத்தியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய முதியவர்கள்-மாற்றுதிறனாளிகள்

நெல்லை– தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.