சனி, ஏப்ரல் 12, 2014

‘நாங்க போட்டுட்டோம்; நீங்க...கிளம்புங்க...’

ரட்டை அடிப்பதற்கும், கேலி, கிண்டலுக்கு மட்டும் தான் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று நீங்கள் நினைத்தால் அது கண்டிப்பாக தவறு என்று இப்போது உணர்வீர்கள். ஆம், இந்த சமயத்தில் பாருங்கள், இவற்றில் குவிந்திருப்பது ‘மை’ கையோடு இளைஞர்கள், பெண்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தான். காரசாரமாக கருத்துக்களை பரிமாறிக்கொள்ளப்பட்ட இந்த சமூக வலை தளங்களில், இளைஞர்கள் ஓட்டு போட்ட கையோடு போட்டோவை ‘அப்லோடு’ செய்து தந்த வாசகம், ‘நாங்க போட்டுட்டோம்...நீங்க...கிளம்புங்க’ என்பது தான். 

புதிய அறிவியல் சாதனங்களின் வருகையால் புதிய டிரெண்டுகளும் வளர்வது வாடிக்கை. சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்ததும், காலையில் எழுந்ததில் இருந்து தூங்கப்போவது வரை நாள் முழுக்க செய்யும் அத்தனை விஷயங்களையும் அதில் அப்லோட் செய்வது இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல, வயதானவர்களையும் ஈர்த்துள்ள விஷயம்.  தேர்தல் திருவிழா நடக்கும் இந்த மாதத்தில் அது தொடர்பாக மக்களின் அரசியல் பதிவுகளும், கருத்துகளும்,  தலைவர்களின் தலையில் குட்டுகளும், நாட்டைப் பற்றிய மக்களின் கவலைகளும் பரவலாக அனைத்து சக வலைதளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. 

இதன் தாக்கம் இந்த தேர்தல் முடிவுகளில் எப்படி பிரதிபலிக்கும் என்பதுதான் இப்போதைய அரசியல் நோக்கர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மக்களவைக்கு 3ம் கட்டத் தேர்தல் நடைபெற்ற பல மாநிலங்களில் இளைஞர்களும், பெண்களும் தாங்கள் ஓட்டுபோட்டதும் ‘ஹலோ, நானும் ஓட்டு போட்டுவிட்டேன், பாருங்க’ என்ற ரீதியில் தங்கள் படங்களை அப்லோட் செய்து வருகின்றனர். 

இவர்களில் பலருக்கு இதுதான் முதல் வாக்குபதிவாக இருக்கிறது என்பதுதான் இதில் சுவாரஸ்யமானது. வலைதளம் முழுவதும் இத்தகைய படங்களும், என் ஜனநாயக கடமையை சரியாக செய்துவிட்டேன் என்பது போன்ற வாசகங்களும் இரைந்துகிடக்கின்றன. இந்த தேர்தலில் வாக்குகள் பதிவான சதவீதம் அதிகரித்தால் அதற்கு சமூக வலைதளங்களின் பங்களிப்பும் முக்கிய காரணமாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக