பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கிரிமினல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் பலன் கிடைக்கவில்லை. தேர்தலுக்கு தேர்தல் கிரிமினல் குற்றவாளிகள், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக போட்டியிடுவது அதிகரித்து வருகிறது.
பாராளுமன்றத்துக்கு தற்போது நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 8 கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் முடிந்துள்ளது. மனு செய்திருப்பவர்களில் 3305 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருப்பது ஜனநாயக உரிமைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.அதன்படி கட்சிகள் நிறுத்தியுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களில் 10 சதவீதம் பேர் கிரிமினல் குற்றவாளிகள் ஆவார்கள். கடந்த 2009–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் அதிகமாகும்.
கிரிமினல் வேட்பாளர்களை தேர்வு செய்து போட்டியிட வைத்திருப்பதில் பா.ஜ.க. முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த கட்சி வேட்பாளர்களில் 18 சதவீதம் கிரிமினல் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள். கடந்த தேர்தலில் பா.ஜ.க. தரப்பில் 11 சதவீத கிரிமினல்களே போட்டியிட்டனர்.
காங்கிரஸ் கட்சியில் கிரிமினல்கள் தேர்வு செய்யப்படுவது குறைந்துள்ளது. ராகுல் காந்தியின் நடவடிக்கைகள் காரணமாக கடந்த தேர்தலில் 12 சதவீதமாக இருந்த கிரிமினல் வேட்பாளர்கள் எண்ணிக்கை இந்த தடவை 11 சதவீதமாக குறைந்துள்ளது.
இதற்கிடையே பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளிலும் கோடீசுவர வேட்பாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர்தான் கோடீசுவரர்களாக இருந்தனர். ஆனால் இந்த தடவை 84 வேட்பாளர்கள் கோடி சுவரர்கள் பட்டியலில் உள்ளனர்.
கடந்த 2009–ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 42 கோடீசுவர வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தடவை பா.ஜ.க.வில் 74 கோடீசுவர வேட்பாளர்கள் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக