ஞாயிறு, ஏப்ரல் 27, 2014

அ.தி.மு.க தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

கோவை ஆருகிலுள்ள கருமத்தம்பட்டி பேரூராட்சியில், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான 46.17 ஏக்கர் நிலம் உள்ளது. இதை விற்க முடிவு செய்த உரிமையாளர்கள், கடந்த ஆண்டு ஜூலையில் கோவை, ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒரு “ரியல் எஸ்டேட்” உரிமையாளர் சோமசுந்தரம் என்பவர் பெயருக்கு, 'பவர்' வழங்கினர்.

அவர், 'சோமுஸ் டெக்ஸ்சிட்டி' என்ற பெயரில், அந்த இடத்தை மனைப்பிரிவுகளாக பிரித்து விற்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனைகளை விற்க விடாமல், கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவரும், செயல் அலுவலரும் தடைகளை ஏற்படுத்தி, பணம் கேட்டு மிரட்டுவதாகவும், கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்திருந்தார். ஆனால், வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் இழுத்தடித்து வந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட“ரியல் எஸ்டேட்” உரிமையாளர் சோமசுந்தரம் தனது புகார் குறித்து நடவடிக்கை எடுக்காமல், போலீசார் கால தாமதம் செய்தவதாக கோவை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

கருமத்தம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சிவசாமி மற்றும் தலைவர் மகாலிங்கம் (அ.தி.மு.க.,) ஆகியோர் என்னை பேரூராட்சி அலுவலகத்துக்கு அழைத்தனர். நான் எனது நண்பர்கள் மூன்று பேருடன் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது, தலைவரும், செயல் அலுவலரும், 'டி.டி.பி., எல்.பி.ஏ., அங்கீகாரம் பெற காலதாமதமும், பணச்செலவும் அதிகமாகும். அதற்கு பதிலாக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை அரசாணை. எண் 50-ன் படி சதுர அடிக்கு ரூ. 1 கட்டினால், பேரூராட்சியின் அங்கீகாரம் வழங்குகிறோம்,' என்று கூறினர்.

அப்படி செய்ய எங்களுக்கு சென்ட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம், 3 ஆயிரம் சென்ட்டுக்கு, மூன்று கோடி ரூபாய் தனியாக தரவேண்டும்,' எனவும் கூறினர். அதை ஏற்க மறுத்து, அங்கிருந்து நாங்கள் புறப்பட்ட போது, 'பணத்தை கொடுக்க ஒப்புக்கொள்ளாவிட்டால், மனைப்பிரிவுகளை விற்க விடமாட்டோம்,' என, இருவரும் மிரட்டல் விடுத்தனர்.

தப்பி வந்து கருமத்தப்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தேன். புகாரை ஏற்க மறுத்த போலீசார், என்னை திருப்பி அனுப்பினர். பணம் கேட்டு எங்களை மிரட்டிய கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி, இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கருமத்தம்பட்டி போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் சேகரன், வழிமறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக