அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் அமர்ந்தவாறு 16 வயது சிறுவன் ஒருவன் திருட்டுத் தனமாக பயணம் செய்துள்ளான்.
உறையும் குளிரில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாயி வரை 5 மணி நேரப் பயணத்தை இந்த சிறுவன் கடந்து வந்துள்ளதாக ஹவாயி காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஹவாயின் மோயி விமானநிலையத்தில் எந்தவிதமான அடையாள ஆவணங்களும் இன்றி இந்த சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய புலனாய்வு துறை (FBI) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பயணத்தில் வரும்வழியில் போதியதளவு பிராணவாயு (ஆக்ஸிஜன்) இல்லாமல் மயங்கியிருந்த அந்த சிறுவனுக்கு விமானம் தரையிறங்கும்போது நினைவு திரும்பியுள்ளது.
அவன் உயிருடன் இருக்கிறான் என்பது ஆச்சரியத்துக்குரிய விஷயம் என்று ஹவாயி ஏர்லைன்ஸ் விமானசேவையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதுபற்றி சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக