பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், 22. கடந்த 2010 இங்கிலாந்து தொடரில் லார்ட்ஸ் டெஸ்டில் 'ஸ்பாட் பிக்சிங்' செய்து பிடிபட்டார்.
ஐ.சி.சி., சார்பில் இவருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தவிர, இங்கிலாந்து கோர்ட் 6 மாத சிறைத்தண்டனை விதித்தது. சம்பவம் நடந்த போது, ஆமிருக்கு வயது 18 என்பதால், சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டு, நன்னடத்தை காரணமாக விரைவில் விடுவிக்கப்பட்டார். இவரது தடைக்காலம் வரும் ஆக., 2015ல் தான் முடிகிறது.
ஆனால், 11வது உலக கோப்பை தொடர் 2015, பிப்., 14 முதல் மார்ச் 29 ல் நடக்கவுள்ளது. இதனால், சிறப்பு அனுமதி கிடைக்கவில்லை எனில், ஆமிர் உலக கோப்பை தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆமிர் கூறுகையில்,'' இந்த சிக்கலில் இருந்து, கடவுள் என்னை விடுவிப்பார் என நம்புகிறேன். இது நடந்து விட்டால், அப்புறம், நான் விளையாடுவதை யாராலும் தடுக்க முடியாது. மற்றபடி, என்னைப் பொறுத்தவரையில் உலக கோப்பை தொடர் முக்கியமல்ல,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக