செவ்வாய், ஏப்ரல் 29, 2014

ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணி 5வது முறையாக வெற்றி

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 18-வது ஆட்டத்தில் பெங்களூர்-பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 
முதலில் ஆடிய பெங்களூர் அணிக்கு, பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் கடும் சவால் அளித்தனர். குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சந்தீப் சர்மாவின் மிரட்டல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். துவக்க வீரர் கெய்ல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களை ஏமாற்றினார். நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்த யுவராஜ் சிங் 32 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 35 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். 

இதேபோல் டிவில்லியர்ஸ் 17 ரன்களும், மோர்கல் 15 ரன்களும் சேர்க்க, பெங்களூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர் முடிவில் 124 ரன்கள் சேர்த்தது. 

125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சேவாக் 32 ரன்னிலும் புஜாரா 10 ரன்னிலும் சஹா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் அடுத்தடுத்த இடைவெளியில் அந்த அணியின் விக்கெட்டுகள் விழுந்தன. மிகுந்த எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் டேவிட் மில்லர் 26 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 18.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 127 ரன்கள் குவித்தது.

இந்த ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் 5வது முறையாக வெற்றியை கைப்பற்றியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக