செவ்வாய், ஏப்ரல் 29, 2014

வெடிப்பொருட்கள் பதுக்கல்: கேரளாவைச் சார்ந்த பிஜு தாமஸ், ஹரியானாவில் கைது!

தேர்தலுக்கு சற்று முன்பு கர்நாடகா மாநிலம் கார்க்கலையில் டன் கணக்கில் வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த வழக்கில் முக்கிய நபரான கேரளா மாநிலம் கோட்டயத்தை ச்சார்ந்த பி.கே.பிஜு தாமஸை ஹரியானாவில் வைத்து கர்நாடகா போலீஸ் கைதுச் செய்தது.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி கார்க்கலையில் உள்ள அஜக்கோரில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 10 டன் வெடிப்பொருட்கள் மூதலில் பறிமுதல் செய்யப்பட்டது.அமோனியம் நைட்ரேட், டெட்டனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டன.தொடர்ந்து நடந்த விசாரணையில் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இவ்வழக்கை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் ஹரியானாவில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
காஸர் கோடு பகுதியில் வெடிப்பொருட்களை பதுக்கிய சம்பவத்திலும் பி.கே.பிஜு தாமஸ் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக