சனி, ஏப்ரல் 19, 2014

பெங்களூர் அணிக்கு எதிராக மும்பை அணி 115 ரன் சேர்ப்பு

பெங்களூர்- மும்பை அணிகளுக்கு இடையேயான 5-வது ஐ.பி.எல். லீக் போட்டி துபாயில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் வீராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். 

மும்பை அணியில் ஹசி, டாரே, ராயுடு, சர்மா, பொல்லார்டு, கோரி ஆண்டர்சன், ஹர்பஜன் சிங், மலிங்கா, பும்ரா, ஓஜா ஆகியோரும், பெங்களூர் அணியில் பார்த்தீவ் பட்டேல், மாட்டின்சன், கோலி, யுவராஜ் சிங், டி வில்லியர்ஸ், அல்பி மோர்கல், ராணா, ஸ்டார்க், டிண்டா, சாஹல், வருண் ஆரோன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். 

மும்பை அணியைச் சேர்ந்த ஹசி- டாரே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். ஹசி 16 ரன்னிலும், டாரே 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த ராயுடு நிதானமாக விளையாட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். அதனால் மும்பை அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்தது. சர்மா (2). பொல்லார்டு (3), கோரி ஆண்டர்சன் (18), ஹர்பஜன் சிங் (8), ஜாகீர்கான் (0), மலிங்கா (2) ரன்களில் அவுட் ஆனார்கள்.

ராயுடு ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 35 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணி தரப்பில் ஸ்டார்க், வருண் ஆரோன், சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக