ராஜபக்ஷேவுக்கும், நரேந்திரமோடிக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
கன்னியாகுமரியில் புதன் கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் அவர் வருவதற்கு முன்பாக நடிகர் கார்த்திக் பேசியது:
தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் இது. காங்கிரஸ்தான் தர்மம்.பா.ஜ.க அதர்மம். நாட்டை வலிமையாக்கும் இடத்தில் மோடியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிறைய பேர் பொய் சொல்லியே சுற்றி வருகின்றனர்.குழப்பத்தில் இருந்து மக்களை மீட்கவேண்டும்.
குஜராத்தில் 2002-இல் ஏற்பட்ட கோத்ரா சம்பவத்தை யாரும் மறக்க முடியாது. அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காதவர் மோடி. அவர் பிரதமரானால் இந்த தேசம் என்ன ஆகும்? சிதறு தேங்காயாக மாறிவிடும்.
நம்மைச் சுற்றியுள்ள நாடுகளால் ஆபத்து இருக்கும் இந்நேரத்தில் நரேந்திரமோடியிடம் நாட்டை ஒப்படைத்துவிட கூடாது.தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்காவிட்டால் மக்கள் தோற்றுவிடுவர். இவ்வாறு கார்த்திக் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக