செவ்வாய், ஏப்ரல் 29, 2014

காணாமல் போன விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை எட்டுகிறது: ஆஸி.பிரதமர்!

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி புதிய கட்டத்தை அடைந்துள்ளது என்று கூறுகிறார் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட். அந்த விமானத்தின் சிதிலங்கள் இனியும் இந்தியப் பெருங்கடலின் மேற்பரப்பில் கிடைக்கும் என்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் நீருக்கு அடியிலான தேடுதல் பணி மேலும் பரந்த அளவிலானப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக நீருக்கு அடியில் தேடும் நடவடிக்கைகளுக்கு ப்ளூஃபின் வகை நீர்மூழ்கி இயந்திரம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றாலும், சோனார் ஸ்கேன் வழியில் தேடுதலை முன்னெடுக்கும் பணி வர்த்தக ரீதியில் ஒப்பந்த அடிப்படையில் இதில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் என ஆஸ்திரேலியப் பிரதமர் கூறுகிறார்.
காணாமல் போன விமானத்தை தேடும் நடவடிக்கை பல மாதங்கள் தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த மலேசிய விமானத்தை தேடும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா உத்தேசமாக 60 மில்லியன் டாலர்களை செலவழிக்கும் என்றாலும், மற்ற நாடுகளிடமிருந்தும் நன்கொடைகளை கோரும் எனவும் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன அந்த விமானத்தில் 239 பேர் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக