வியாழன், ஏப்ரல் 24, 2014

தி.மு.க. வெற்றி வாய்ப்பு சாதகமாக உள்ளது: கருணாநிதி பேட்டி

தி.மு.க. தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை 10.55 மணிக்கு ஓட்டு போட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

கேள்வி:- தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள். இந்தத் தேர்தல் தி.மு.க. அணிக்கு சாதகமாக இருக்குமா?
பதில்:- சாதகமாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே சாதகமாக இருக்குமென்று நம்புகிறேன்.

கே:- தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? கடந்த முறை பெற்றதைவிட அதிகமான இடங்களை தி.மு.க. பெறுமா?
ப:- நிச்சயமாகப் பெறும்.

கே:- தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.க. எல்லா இடங்களிலும் பணப் பட்டுவாடா செய்திருக்கிறதே?
ப:- அ.தி.மு.க. பணத்தில் புரளுகிற கட்சி. எனவே அவர்கள் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

கே:- தொடர்ந்து தி.மு.கழகத்தின் சார்பாக அ.தி.மு.க.வின் மீது தேர்தல் கமிஷனிடம் புகார்கள் கூறிவருகிறீர்கள். அதில் நடவடிக்கை எடுக்கப் பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?
ப:- நடவடிக்கை எடுத்ததாக இதுவரைத் தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக